என்னாது தங்கத்தில் காரா? அப்படி என்ன ஸ்பெஷல்? எந்த நிறுவனம் தயாரித்துள்ளது. உண்மையிலேயே இது விற்பனைக்கா? என பல கேள்விகள் எழுகின்றன?
உண்மை தான், இந்த காரினை டெஸ்லா நிறுவனம் தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரினை கேவியர் நிறுவனம் தான் வடிவமைப்பு செய்துள்ளது.
ரஷ்யாவினை சேர்ந்த கேவியர் நிறுவனம் பற்றி பலரும் படித்திருக்கலாம். கேள்விப்பட்டிருக்கலாம். இந்த நிறுவனம் உலகின் மிக விலையுயர்ந்த பொருட்களை அறிமுகப்படுத்துவதையே வாடிக்கையாக வைத்துள்ளது.
டெஸ்லா கார்
ஏற்கனவே செல் போனினை தங்கத்தால் செய்து விற்பனை செய்து வருகின்றது. குறிப்பாக ஆப்பிள் போன் மற்றும் ஹெட் போனை தங்கத்தில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தான் தற்போது டெஸ்லா காரினை தங்கத்தில் வடிவமைத்துள்ளது.
உலகின் முன்னணி சொகுசு மின்சார வாகன நிறுவனமான இது, ஏற்கனவே பில்லியனர்களுக்கு ஏற்ப தயாரித்து வருகின்றது.
தங்க முலாம் பூசப்பட்ட கார்
இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் விலை உயர்ந்த காரான டெஸ்லா மாடல் எஸ் என்ற காரினை 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட காராக உருவாக்கியுள்ளது.
இந்த காரின் ரேடியேட்டர், கிரில் மற்றும் பம்பர்ஸ், கண்ணாடிகள் ஆகியவை சுத்தமான 24 காரட் தங்கத்தால் ஆன தங்க முலாம் பூசப்பட்டுள்ளன. இதன் பொன்னட் மற்றும் ரீர் பம்பரில் தங்க கிரீடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
வெறும் 99 கார்கள் மட்டுமே
மிகவும் விலையுயர்ந்த காராக இருக்கும் இந்த மாடலில், வெறும் 99 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளனவாம். டபுள் எலக்ட்ரோ பிளேடிங் டெக்னிக்கைப் பயன்படுத்தி காரில் தூய தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தில் இயக்கக்கூடிய இந்த கார் கருப்பு மற்றும் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்போருக்ல்கு ராயல் லுக்கைக் கொடுக்கிறது.
விலை எவ்வளவு
மொத்தத்தில் டெஸ்லாவுக்கு மேலும் அழகு சேர்த்துள்ள கேவியர், இந்த காரின் விலை என்பது குறித்து தெளிவான அறிவிப்பு இல்லை. எனினும் தங்க முலாம் பூசப்பட்ட இந்த காரின் விலை 3 லட்சம் டாலர்களுக்கு மேலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை அதிகரித்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை
சாதாரணமாகவே டெஸ்லா கார்களின் விலை அதிகம், அந்த வகையில் தங்க முலாம் பூசப்பட்ட கார் என்பதால் இன்னும் விலை கூடுதலாக அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எது எப்படியோ வெறும் 99 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்படி வரவேற்பு இருக்கிறதோ அதனை பொருத்து, இந்த தங்க காரின் உற்பத்தி மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tesla’s Gold-Plated Expensive Car: Do You Know How Much It Cost?
Tesla’s Gold-Plated Expensive Car: Do You Know How Much It Cost?/முழுக்க முழுக்க தங்க முலாம்.. உலகிலேயே காஸ்ட்லியான டெஸ்லா கார் இதுதான்..!