இந்தியாவின் முதல் பிராப்பர் சிங்கிள் ஷாட் ஆக்ஷன் மூவி என்ற அறிவிப்போடு களம் இறங்கியிருக்கிறது யுத்த கான்டம் என்கிற திரைப்படம். ஸ்வீடனில் சிறந்த படம், உள்பட பல சர்வதேச விருதுகளையும் இந்தப் படம் வென்றிருக்கிறது. படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான ஶ்ரீராம் கார்த்திக்கிடம் பேசினேன்.
”இது ஒரு த்ரில்லர்னால, ஆடியன்ஸ் கதையை விட்டு நகராமல் இருக்கணும் என்பதற்காகதான், இதை சிங்கிள் ஷாட்ல எடுக்க நினைச்சோம். ஒரு சம்பவத்தை நீங்க அதன் அருகே இருந்து பார்க்கறது போல உணர்வீங்க. ஒரு ஆக்ஷன் படத்தை சிங்கிள் ஷாட்ல எடுத்திருக்கோம். `இரவின் நிழல்’ ஒரு நான் லீனியர் படம். ஆனா, இது அப்படியில்ல. ஒரு லீனியர் படத்தை எந்த கட்டும் பண்ணாமல் அப்படியே எடுத்திருக்கோம். தமிழ்ல சிங்கிள் ஷாட் மூவியில இதுக்கு முன்னாடி `அகடம்’னு ஒரு படம் வந்திருக்கு. ஆனா, அவங்க ஒரே இடத்துல ஷூட் பண்ணியிருப்பாங்க. ஆனா, இந்தப் படம் வேறவேற லொகேஷன்ல ஷூட் செய்திருக்கோம். சென்னையில ஐந்து இடங்கள்ல இந்த படத்தோட படப்பிடிப்பு நடந்திருக்கு.
இதுக்கு முன்னாடி நான் `கன்னிமாடம்’ படத்துல நடிச்சிருந்தேன். இது என்னோட ரெண்டாவது படம். தவிர, `யுத்த காண்டம்’ல `கோலிசோடா 2′ கிருஷ் குருப்’ யோக்ஜேபி, சுரேஷ்மேனன், போஸ் வெங்கட் என நிறைய பேர் நடிச்சிருக்கோம். இனியன் ஜே.ஹரீஸ் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ஐந்து லொக்கேஷன்கள்ல ஒரு சீன் எங்களுக்கு ரொம்ப சவாலா இருந்துச்சு. ஒரு உயரமான சுவரை, நான் தாண்டுற சீனை எடுக்கும்போது அந்த சுவரை கேமராவும் தாண்டணும். அப்படி எடுக்க ரொம்ப மெனக்கெட்டோம். இந்தியாவுல இதுக்கு முன்னாடி பிராப்பர் சிங்கிள் ஷாட்ல ரெண்டு படங்கள் வந்திருக்கு. ஆனா, அதை கமர்சியல் திரைப்படங்கள்னு சொல்லிட முடியாது. அது ஆர்ட் ஃபிலிம் போலத்தான் இருக்கும். இது பக்கா கமெர்ஷியல் த்ரில்லர்னால, தைரியமா பிராப்பர் சிங்கிள் ஷாட்னு சொல்லியிருக்கோம். பல விழாக்களுக்கு படத்தை அனுப்பி, விருதுகளையும் எங்க படம் அள்ளிட்டு வந்திருக்கு” என்கிறார் ஶ்ரீராம் கார்த்திக்.