சியோல்: கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வட கொரியாவில் தற்போது யாருக்குமே காய்ச்சல் இல்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவில் ஜூலை 30ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக காய்ச்சல் எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாடு தெரிவித்துள்ளது. சில மாதங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டுவந்த நாட்டில் 4.77 மில்லியன் காய்ச்சல் நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளதாக வட கொரியா கூறுகிறது, அதே நேரத்தில் ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து 74 பேர் இறந்துள்ளனர். இருப்பினும், கோவிட் நோயால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதை வடகொரியா உறுதிப்படுத்தவில்லை. வடகொரியாவில் காய்ச்சல் பாதித்த நோயாளிகள் அனைவரும் குணமடைந்துவிட்டதாக அந்நாட்டின் அரசு ஊடகமான KCNA தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியதில் இருந்து முதன்முறையாக இதுபோன்ற தகவலை வடகொரியா தெரிவித்துள்ளது. நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படவில்லை என்றே நீண்ட காலமாக வடகொரியா தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கோவிட்-19 தடுப்பூசியால் மரணம்! இறப்புக்கும் தடுப்பூசிக்கும் இடையில் தொடர்பு உறுதி
“ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி மாலை 6 மணி வரை காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இல்லை. தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையை வலுப்படுத்துவதற்கும், நாடு முழுவதும் தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்கும் நடவடிக்கைகளுக்கு மத்தியில், தொற்றுநோய்க்கு எதிரான கொள்கைகள் மீது வலுவான கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் தொடர்கிறது” என்று வடகொரியாவின் அவசர தொற்றுநோய் தடுப்பு தலைமையகத்தின் அதிகாரி ரியூ யோங் சோல் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தொற்றுநோய் எதிர்ப்பு நிலைமை… ஒரு உறுதியான நிலைப்பாட்டிற்குள் நுழைந்துள்ளது” என்று வடகொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், “அரசு தொற்றுநோய் எதிர்ப்புக் கொள்கைகளை நிறைவேற்றுவம் முயற்சிகளை இரட்டிப்பாக்க நாடு திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க | கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 27 சதவீதம் பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு
புதிய COVID-19 வகை வைரஸ்கள் பாதிப்பு தொடர்பாகன் கண்காணிப்பை வலுப்படுத்தவும், நெருக்கடியான சூழ்நிலையில் மருத்துவ ஊழியர்களை விரைவாக ஒன்று சேர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் வட கொரிய செய்தி ஊடகம் KCNA மேலும் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் COVID-19 நிலைமை குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) அச்சம் வெளியிட்டுள்ளது. ஏனென்றால், கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், வடகொரியா ஒருபோதும் தங்கள் நாட்டின் கொரோனா பரவல் தொடர்பான தரவுகளை உலகத்துடன் பகிர்ந்துக் கொண்டதே இல்லை.
சுமார் 4.77 மில்லியன் மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. ஆனால், காய்ச்சலை, தொற்று என்றோ, கோவிட் என்றோ வடகொரியா தெர்விக்கவில்லை. எத்தனை பேர் COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்துள்ளனர் என்பதை அந்நாடு உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | Monkeypox: குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ