கர்நாடகாவின் பெங்களூருவில் 5 வயது மகளை 4ஆவது மாடியில் இருந்து தரையில் வீசி கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்தனர்.
சம்பங்கி ராமநகர் பகுதியை சேர்ந்த சோமேஸ்வர் என்பவருக்கு வாய் பேசமுடியாத, காது கேட்காத ஐந்து வயது மகள் உள்ள நிலையில், அவரது மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை அப்பெண், தனது மகளை அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே தூக்கி வீசி எறிந்து, தானும் கீழே குதிக்க முயன்றார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றிய நிலையில், கீழே விழுந்த சிறுமி உயிரிழந்தார்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், தாயை போலீசார் கைது செய்தனர்.