திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து சோதனைகளை ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி பகுதியில் வாலிபர் ஒருவர் காவல்துறையினரை பார்த்து தப்பியோட முயன்றார். சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் காவல்துறையினர் அவரது நண்பர்கள் 3 பேரையும் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், காவல்துறையினர் அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் திருப்பூர் கரட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த பருன்ராவ், கௌதம், சஞ்சய்குமார் மற்றும் அபிஷேக்குமார் என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 1 1/2 கிலோ கஞ்சா மற்றும் 3 மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு அவர்களை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.