அமெரிக்கா: `இதற்குமேல் என்னால் முடியவில்லை’ – குடும்ப வன்முறையால் இந்தியப் பெண் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரியா கிராமத்தைச் சேர்ந்த மந்தீப் கவுர் (30) என்பவருக்கும், லாரி டிரைவரான ரஞ்சோத்பீர் சிங் சந்து என்பவவருக்கு பெற்றோரின் ஏற்பாட்டில் திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன் இந்த திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு 6 வயதிலும், 4 வயதிலும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ரஞ்சோத்பீர் சிங் சந்து லாரி ஓட்டும் பணிக்கு தன் குடும்பத்தையும் அமெரிக்கா அழைத்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் மந்தீப் கவுர் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அவர் வெளியிட்ட 5 நிமிட வீடியோவில், “இப்போது தினசரி அவர் அடிப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இவ்வளவு காலமும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டதற்கு காரணம், எனது இரண்டு மகள்கள். அவர்களை தனியே விட்டுச் செல்ல விரும்பவில்லை. ஆனால் இப்போது என்னால் இந்த சித்திரவதையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் இந்த தீர்க்கமான முடிவை எடுக்கிறேன்.

ரஞ்சோத்பீர் சிங் சந்து – மந்தீப் கவுர்

எனது கணவருக்கு பல வருடங்களாக திருமணத்திற்கு புறம்பான பல உறவுகள் இருக்கிறது. எனக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளைப் பார்த்து, என் தந்தை என் கணவர் மீது ஒரு வழக்கையும் பதிவு செய்தார். ஆனால். என் கணவர் கெஞ்சி கேட்டு அதை வாபஸ் வாங்க வைத்தார். மேலும், இந்த வழக்கு தொடர்ந்ததால், ஐந்து நாள்கள் என்னை பிணைக் கைதியாக வைத்திருந்தார். கடுமையாக தாக்கினார்.

எனது மாமியார் என்னை அடிக்க, சித்திரவதை செய்ய எனது கணவரை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் அவர் திருந்திவிடுவார் என்ற நம்பிக்கையில், என்னால் முடிந்தவரை எல்லா வலிகளையும் தாங்கி வாழ முயற்சி செய்தேன். எனது பெற்றோரிடம் இதைக் கூறியும் எந்த பயனும் இல்லை. அதனால், இன்றே என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துவிட்டேன். எனது இரண்டு மகள்களை மட்டும் யாராவது பார்த்துக்கொள்ளுங்கள்” எனப் பேசியுள்ளார்.

ரஞ்சோத்பீர் சிங் சந்து – மந்தீப் கவுர்

மேலும், இது தொடர்பான விசாரணையின் போது கிடைத்த சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன. அதில், ரஞ்சோத்பீர் சிங் சந்து தன் மனைவி மந்தீப் கவுரை தாக்கும் போது, `அம்மாவை அடிக்காதீங்க’ என இரண்டு பிள்ளைகளும் கெஞ்சுகிறார்கள். ஆனால், ரஞ்சோத்பீர் சிங் சந்து அந்த குழந்தைகளின் கழுத்தை நெரித்து, “எனக்கு பெண் பிள்ளைகள் வேண்டாம், ஆண் பிள்ளைதான் வேண்டும்” என குழந்தைகளையும் கொடுரமாக தாக்குகிறார்.

மந்தீப் கவுரின் தந்தை ஜஸ்பால் சிங், எனது பேத்திகளை காவலில் வைக்க வேண்டும். மேலும், எனது மகளின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உதவுங்கள்” என அமெரிக்காவில் உள்ள அரசு மற்றும் சீக்கிய சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மந்தீப் கவுர்-காக போராடுன் மக்கள்

இந்த நிலையில், மந்தீப் கவுர் மரணம் தற்கொலை வழக்காக பதிவி செய்யப்பட்டு கணவன் ரஞ்சோத்பீர் சிங் சந்து போலிசாரால் விசாரிக்கப்படுகிறார். ஆனால், அமெரிக்காவின் ரிச்மண்டில், `மந்தீப்பிற்கு நீதி வேண்டும்’ என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், அவர் கணவர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மக்கள் ரிச்மண்டில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.