ஐதராபாத்: சமையல் எரிவாயு வின் தொடர் விலை அதிகரிப்பால் மீண்டும் பழயை படி விற்கு அடுப்பிற்கு மாற துவங்கி உள்ளனர் தெலங்கானா, ஆந்திரா மக்கள்.
கடந்த 2014 ஆம் ஆண்டு வரையில் சமையல் சிலிண்டர் விலை அதிகபட்சமாக ரூ.500 வரையில் மட்டுமே இருந்து வந்தது. பின்னர் பதவியேற்ற மத்திய அரசு கொண்டு வந்த அதிரடி உத்தரவின் காரணமாக சிலிண்டர் பதிவு எண்ணுடன் வங்கி கணக்கு எண் இணைக்கப்பட்டது. இதனையடுத்து சிலிண்டர் ஒன்றிற்கான மானியமாக ரூ.400 வரை நுகர்வோருக்கு அளிக்கப்பட்டு வந்தது.
தொடர்ந்து வந்த ஆண்டுகளில் மானியம் குறைக்கப்பட்டது கொரோனா தொற்று காரணமாக மக்களிடம் காணப்பட்ட பணப்பற்றாக்குறை மற்றும் சர்வதேச அளவிலான போர் உள்ளிட்ட காரணங்களால் சிலிண்டர் ஒன்றின் விலை ஆயிரம் ரூபயையும் தாண்டியது.
இதன்காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த சுமார் 13 லட்சம் பேர் கடந்த ஓராண்டாக சிலிண்டரை பதிவு செய்யாமல் விறகு அடுப்பிற்கு மாறத்துவங்கி உள்ளனர்.
இது குறித்து ஐ தராபாத் எல்.பி.ஜி., விநியோகஸ்தர் சங்க தலைவர் அசோக்குமார் கூறுகையில் விலைஉயர்வு காரணமாக இருக்க முடியாது. அதே நேரத்தில் மக்கள் ஒரு சிலிண்டரை மட்டுமே காலியான உடன் பதிவு செய்து கொள்கின்றனர். மற்றொரு சிலிண்டரை பதிவு செய்வதில்லை என்றார்.
அதே நேரத்தில் இது மாதிரியான சம்பவங்கள் டில்லி , அசாம் சட்டீஸ்கர், பீகார், ம.பி.,மகா., மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காணப்படுவதாக ராஜ்யசபாவில் ராமேஸ்வர் திவாரி தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement