Chennai Tamil News: சென்னையில் பெண்களின் வசதிக்காக, கட்டணம் இல்லாமல் பயணிக்கும்படி இளஞ்சிவப்பு நிறத்தில் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பெண்கள் இப்பேருந்துகளை எளிதில் கண்டறியும் வகையில், பேருந்துகளின் முன் பக்கமும் பின் பக்கமும் இளஞ்சிவப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் இவ்வசதியை இன்று சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் சேகர் பாபு முன்னிலையில் தொடங்கியுள்ளனர்.
இந்நிகழ்வை சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து தொடங்கி ஓமந்தூரார் வளாகம் வரை அப்பேருந்துகளில் பயணித்தார்கள்.
தமிழ அரசால் தொடங்கப்பட்ட இந்த முயற்சியில், முதல் ஐம்பது பேருந்துகளில் இளஞ்சிவப்பு நிறம் வர்ணம் பூசி மாற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக தினந்தோறும் 602 வழித்தடங்களில் 3,100 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதில், எல்லோரும் பயணிக்கும் சாதாரண அரசு பேருந்துகளின் 1,559 என்று கூறுகின்றனர். இந்த பேருந்துகளில் முதல் கட்டமாக ஐம்பது பேருந்துகளை இளஞ்சிவப்பு நிறம் பூசப்பட்டு பெண்களுக்காக மாற்றப்பட்டுள்ளது.
மீதம் உள்ள பேருந்துகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து படிப்படியாக பெண்களுக்காக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil