புதுடில்லி: டில்லியில் உள்ள போலீஸ் ஸ்டேசன் ஒன்றில் வந்த சிலர், ஹெட் கான்ஸ்டபிள் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனந்த் விஹார் போலீஸ் ஸ்டேசனில் நடந்த இந்த சம்பவம் கடந்த ஜூலை 31ல் நடந்ததாக தெரிகிறது. ஆக.,3ல் நடத்ததாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
அந்த வீடியோவில், 12 பேர் கும்பல் போலீஸ் ஸ்டேசனுக்குள் புகுந்தனர். அதில் சிலர், போலீசை கடுமையாக தாக்கினர். அருகில் இருந்தவர்கள் அதனை தடுக்காமல் மொபைலில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். தாக்குதலுக்கு உள்ளான போலீஸ் விட்டுவிடும்படி கெஞ்சியும் அந்த கும்பல் கடுமையாக தாக்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தாக்குதலுக்கான காரணம் தெரியவரவில்லை. போலீஸ் ஸ்டேசனில் இருந்த மற்றொரு போலீஸ் படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அது தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
புதுடில்லி: டில்லியில் உள்ள போலீஸ் ஸ்டேசன் ஒன்றில் வந்த சிலர், ஹெட் கான்ஸ்டபிள் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆனந்த் விஹார் போலீஸ் ஸ்டேசனில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்