மே மாதத்தில் ரிசர்வ் வங்கி சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அமெரிக்கா வட்டி உயர்வால் அன்னிய முதலீட்டின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை உயர்த்தியது.
இந்த வட்டி உயர்வுக்குப் பின்பு பெரும்பாலான வங்கிகள் தனது வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்கும் வேளையில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துவிட்டன, இந்த நிலையில் புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள வட்டி உயர்வு சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதில் அதிகம் பாதிக்கப்படுவது ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோமொபைல் துறையாக உள்ளது.
4 வங்கிகளில் பண எடுக்க கட்டுப்பாடு.. ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்குக் கடன் வழங்கும் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் கூடுதலாக உயர்த்திய நிலையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தற்போது இத்துறை வர்த்தகம் குறுகிய கால இடையூறுகளை எதிர்கொள்ளும் என்றும், இத்துறையில் மந்தநிலையை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.
ரியல் எஸ்டேட்
இதேபோல் இந்தப் பாதிப்பு வரவிருக்கும் பண்டிகை காலத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ரியல் எஸ்டேட் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கட்டுமான பொருட்களின் விலை அதிகளவில் உயர்ந்து வரும் நிலையில் இந்த வட்டி உயர்வு புதிதாக வீடு வாங்குவோர் மற்றும் கட்டுவோர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரெப்போ விகிதம்
கடந்த மூன்று மாதங்களில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 1.40 சதவீதம் உயர்த்தியுள்ளது, இதன் மூலம் 5.40 சதவீதமாக உள்ளது. இது தொற்றுநோய்க்கு முந்தைய 5.15 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. இந்த வட்டி உயர்வின் மூலம் அனைத்து வணிக வங்கிகளும் ரீடைல் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும்.
மே மாதம்
மே மாதத்திற்கு முன்பு 6.7 சதவீதமாக இருந்த வீட்டுக் கடனுக்கான வட்டி ஆர்பிஐ முந்தைய அறிவிப்புக்கு பின்பு 7.8 சதவீதம் வரையில் சில வங்கிகள் உயர்த்தியது.
8 சதவீதத்தைத் தாண்டலாம்
இந்நிலையில் மீண்டும் இரு மாத நாணய கொள்கை முடிவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது மூலம் ஹோம் லோன்-க்கான வட்டி விகிதம் 8 சதவீதத்தைத் தாண்டுவது இயல்பான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
RBI repo rate hike: Real estate sales may slowdown on higher loan interest rates
RBI repo rate hike: Real estate sales may slowdown on higher loan interest rates புதிய வீடுகளின் விற்பனை குறையும் அச்சம்.. என்ன காரணம்..?