நோபல் பரிசு வென்ற ஏராளமான சாதனையாளர்களை உருவாக்கிய அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு பயில்வதற்கு ஹைதராபாத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் ரூ.1.3 கோடி கல்வி உதவித்தொகை பெற்றுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த வேதாந்த் ஆனந்த்வாடே (18 ) என்ற மாணவர், அமெரிக்காவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு பயில்வதற்கு ரூ.1.3 கோடி கல்வி உதவித்தொகை பெற்றுள்ளார். நோபல் பரிசு வென்ற 16 சாதனையாளர்களை உருவாக்கிய பெருமை இந்த பல்கலைக்கழகத்திற்கு உண்டு. கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் Pre-Medicine என்ற மருத்துவத்துக்கான தொடக்கநிலைப் படிப்பில் சேர்வதற்கு வேதாந்த் ஆனந்த்வாடே தேர்வாகி உள்ளார்.
இதையும் படிக்க: ‘காத்துல கூட ஊழல் நடக்குதா!’ 2ஜி Vs 5ஜி! லாபமா.. நஷ்டமா? யார் சொல்வது உண்மை? – ஓர் அலசல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM