இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பன்முகத்தன்மை காணப்படுகின்றது. பல்வேறு கலாச்சாரங்கள் உள்ளன. பல்வேறு கலாச்சாரங்கள் நிலவி வருகின்றன.
ஆக ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில், விவசாயம் என பலவற்றையும் பொறுத்து, பொருளாதார வளர்ச்சி விகிதமானது உள்ளது. இதற்கிடையில் கடந்த 2021 – 22ம் ஆண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) அடிப்படையில், எந்த மாநிலங்கள் முன்னிலையில் உள்ளது. எது பின் தங்கியுள்ளது. டாப் 10 மாநிலங்கள் எது? வாருங்கள் பார்க்கலாம்.
இந்தியர்கள் மிக விரும்பும் ஸ்ட்ரீட் உணவுகளை கொண்ட வீதிகள் எது… விலை நிலவரம்?
மகராஷ்டிரா
இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள மகராஷ்டிராவாகும். இது இந்தியாவின் பணக்கார மாலங்களில் ஒன்றாகும். இதன் தலை நகர் மும்பையாகும். இதன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி குறித்தான கணிப்பானது 366.67 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு 26.62 டிரில்லியன் ரூபாயாகும். இம்மாநிலத்தில் விவசாயம் 51%மும், சேவைத் துறை 40%மும், தொழில் துறை 9%மும் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு உற்பத்தி துறை, சர்வதேச வணிகம், மாஸ் மீடியா, ஏரோஸ்பேஸ், தொழில் நுட்பம், பெட்ரோலியம், பேஷன், அப்பாரல், சுற்றுலா துறைகள் அதன் அம்சமாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு
தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலமாகும். இதன் GSDP 19.43 டிரில்லியன் ரூபாயாகும் (265.49 பில்லியன் டாலர்). இம்மாநிலத்தில் வசிக்கும் 50% அதிகமான மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். இங்கு விவசாயம் 13%மும், தொழில்துறை 34%மும், சேவைத்துறை 53%மும் பங்கு வகிக்கின்றன. இங்கு ஆட்டோமொபைல், ஆடோ உதிரி பாகங்காள், பார்மா நிறுவனங்கள், கார்மென்ட்ஸ், டெக்ஸ்டைல்ஸ், லெதர், கெமிக்கல்ஸ் தமிழகத்தில் வலுவான காரணிகளாக பார்க்கப்படுகின்றன.
குஜராத்
குஜராத் நிறுவனத்தின் GSDP மதிப்பானது 18,79,826 கோடி ரூபாயாகும். இதன் மதிப்பு டாலரில் 259.25 பில்லியன் டாலராகும். இங்கு விவசாயம் முக்கிய பங்கு வகிக்கும். விவசாயம் 19%மும், சேவைத் துறை 36%மும், தொழில் துறை 45% ஆகவும் உள்ளது. இதே பார்மா, கெமிக்கல்ஸ், சுத்திகரிப்பு, பெட் ரோல்கெமிக்கல்ஸ், செராமிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோமொபைல் துறை முக்கிய வலுவான துறையாக உள்ளன.
கர்நாடகா
கர்நாடகா GSDP மதிப்பானது 18.03 டிரில்லியன் ரூபாயாகும். இதன் மதிப்பு டாலரில் 247.38 பில்லியன் டாலராகும். இங்கு சேவைத்துறை 64%மும், தொழிற்துறை 26%மும், விவசாயத்துறை 10%மும் உள்ளது. இங்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ், இந்திய டெலிபோன் தொழிற்துறை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் உள்ளன. ஆட்டோமொபைல், அக்ரோ, ஏரோஸ்பேஸ், டெக்ஸ்டைல்ஸ் மற்று கார்மென்ட், பையோடெக் உள்ளிட்ட பலவும் முக்கிய பங்காக உள்ளது.
உத்தரபிரதேசம்
இந்தியாவின் 4வது பெரிய பணக்கார GSDP . இதன் GSDP மதிப்பானது 17.06 டிரில்லியன் டாலராகும்( இதன் மதிப்பு டாலரி 234.96 பில்லியனாகும்). இங்கு சேவைத்துறை 50%மும், தொழில்துறையில் 26%மும், விவசாயத்துறையில் 24%மும் பங்கு வகித்துள்ளது.
மேற்கு வங்கம்
இந்தியாவின் 5வது பெரிய பணக்கார மாநிலமாக உள்ளது. இதன் GSDP மதிப்பானது 14.44 டிரில்லியன் ரூபாயாகும்(206.64 பில்லியன் டாலராகும்). இங்கு சில ஸ்டீல் ஆலைகள் உள்ளன. இங்கு சேவைத்துறை 53%மும், விவசாயத்துறை 21%மும், தொழில் துறை 26%மும் பங்கு வகிக்கின்றன.
ராஜஸ்தான்
ராஜஸ்தானின் GSDP மதிப்பானது 161.37 பில்லியன் டாலராகும், இதன் ரூபாய் மதிப்பு 11.98 டிரில்லியன் ரூபாயாகும். இது விவசாயம், சுரங்கம் மற்றும் சுற்றுலா துறை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு சேவைத்துறையின் பங்ல்கு 47.5%மும், விவசாயத்துறைய்ல் 44.4%மும், தொழில்துறையும் 8.1%மும் பங்கு வகிக்கிறது.
தெலுங்கானா
தெலுங்கானாவின் GSDP விகிதமானது 157.35 பில்லியன் டாலராகும். இங்கு கிருஷ்ணா, கோதாவரி என இரண்டு பெரிய நதிகள் ஓடுகின்றன். இங்கு ஐடி துறை மற்றும் பயோடெக்னாலஜி துறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தெலுங்கானா முக்கிய ஐடி ஏற்றுமதி நிறுவனமாகும்.
ஆந்திரபிரதேசம்
ஆந்திராவின் GSDP விகிதமாது 138.19 பில்லியன் டாலராகும். இந்த மாநிலத்தில் விவசாயமே முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு 62% மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயத்தில் பங்கு வகிக்கின்றது. இங்கு சேவைத்துறை 35%மும், விவசாயத்துறையானது 55%மும், தொழில் துறை 10%மும் பங்கு வகிக்கிறது.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தின் GSDP விகிதமாது 126.40 பில்லியன் டாலராகும். இதன் சேவைத்துறை 35.6%மும், தொழிற்துறை 4.8%மும், விவசாயத்துறை 59.6%மும் பங்கு வகிக்கிறது.
கேரளா
கேரளாவின் GSDP மதிப்பானது 119.93 பில்லியன் டாலராகும். இந்த பொருளாதாரத்தில் சேவைத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதே சேவைத்துறையானது 63.6% பங்கு வகிக்கிறது. இதே தொழில் துறை 28.3%மும், விவசாயத்துறை 8.1%மும் பங்கு வகிக்கிறது.
டெல்லி
டெல்லியின் GSDP மதிப்பானது 108.33 பில்லியன் டாலராகும். இது சேவைத்துறையில் 86%மும், தொழில்துறை 12%மும், விவசாயத்துறை 2%மும் பங்கு வகிக்கிறது.இந்தியாவின் 12வது பணக்கார மாநிலமாகும். இது வங்கித்துறை, நிதித்துரை, இன்சூரன்ஸ் துறை, உணவு, உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள், சுற்றுலா, லாகிஸ்டிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றன.
which are the richest states of india in 2022: what are their strengths?
which are the richest states of india in 2022: what are their strengths?/இந்தியாவின் 10 பணக்கார மாநிலங்கள் எது? தமிழ்நாட்டிற்கு எத்தனையாவது இடம்?