உலகிலேயே விலை மதிக்க முடியாத வைரமான கோஹினூர் வைரம் கருதப்படுகிறது. இது ஆங்கிலேயேயர்களால் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு. இன்று வரையில் இந்த கோஹினூர் வைரம் பற்றி பல கதைகள் உண்டு.
உலகின் விலைமதிக்க முடியாத ஒன்றாக நம்பப்படும் இந்த வைரம் எத்தனை கேரட்டால் ஆனது. இதன் மதிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பிளாஸ்டிக்கு மாற்றான பேப்பர் பை.. நல்ல வருமானம் தரும் சிறு தொழில்..கவனிக்க வேண்டியது என்ன?
எவ்வளவு எடை?
உலகின் மிகப்பெரிய மதிப்பு மிக்க வைரங்களில் கோஹினூர் வைரம் ஒன்றாகும். இது 105 கேரட் எடை கொண்டது. இது பிரிட்டன் அரசிகளின் கிரீடத்தில் இருந்து வருகின்றது. கடந்த 1953ம் ஆண்டு முதல் ராணி இரண்டாம் எலிசபெத் மணி மகுடத்தில் கோஹினூர் வைரம் உள்ளது. இது தற்போது பிரிட்டன் அரசுக்கு சொந்தமானதாகவும் உள்ளது.
இதன் மதிப்பு?
இந்த வைரத்தின் மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இந்த வைரம் ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள கொல்லூர் என்ற இடத்தில், கிபி 13ம் நூற்றாண்டில் இந்த வைரம் வெட்டி எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக இந்த விலை உயர்ந்த வைரமானது பஞ்சாப்பை ஆண்ட துலீப் சிங் என்ற மன்னரால் பிரிட்டீஷாரிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உண்மை நிலவரம்
இது உண்மையில் 793 கேரட் இருந்ததாகவும், தற்போது 105 கேரட் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் எடை 21.6 கிராம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வைரத்தின் மீதான பெயர்கள், வரலாறுகள் பலவும் இருந்தாலும் இதன் விலை மட்டும் மாறவில்லை. உலகின் விலை உயர்ந்த வைரமாகவே பார்க்கப்படுகிறது.
முழு விவரம் என்ன?
இந்த வைரத்தினை எப்போது செய்யப்பட்டது, இதன் விபரம் என்ன என்பது குறித்தான முழு விபரம் தெரியவில்லை. ஏனெனில் ஆரம்ப காலத்தில் இருந்தே இது ஒருவரை விட்டு ஒருவர் கைமாறியதாக கூறப்படுகிறது. ஆனால் இது யாரால் உருவாக்கப்பட்டது. எங்கு வெட்டி எடுக்கப்பட்டது. இதன் முதல் உரிமையாளர் யார் என்பது குறித்தான முழுமையான விவரங்கள் தெரியவில்லை.
சான்ஸி
கோஹினூர் வைரம் மட்டும் அல்ல, சான்சி வைரமும் விலைமதிப்பு மிக்க வைரங்களில் ஒன்றாக உள்ளது, இதன் பூர்வீகமும் இந்தியா என்று தான் கூறப்படுகிறது. எனினும் தற்போது இந்த வைரம் பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்திற்கு சொந்தமானதாக உள்ளது. இது 55.23 கேரட் எடை கொண்டது.
குல்லினன்
குல்லினன் வைரமும் விலை மதிப்புமிக்க வைரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் விலை 400 மில்லியன் டாலர் என்றும் கூறப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் 26,62,13,80,000 ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இது 3106.75 கேரட் எடை கொண்டதாக உள்ளது. இதுவும் சர்வதேச அளவில் மதிப்புமிக்க வரலாற்றினைக் கொண்ட வைரங்களில் ஒன்றாக உள்ளது.
ஹோப்
ஹோப் வைரம் இந்தியாவின் குண்டூரில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது உலகின் 4வது விலை உயர்ந்த வைரமாகும். இது நீல நிறத்தில் உள்ளது. இதன் எடை 45.52 கேரட் ஆகும். இது தற்போது அமெரிக்க அருங்காட்சியக குழுவான ஸ்மித்சோனியன் நிறுவன அலுவலகத்திற்கு சொந்தமானது.
ஸ்டெய்ன்மெட்ஸ் பிங்க்
1999ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் வெட்டப்பட்ட இந்த ஸ்டெய்ன்மெட்ஸ் இளஞ்சிவப்பு வைரமானது, பிங்க் ஸ்டார் என மறுபெயரிடப்பட்டது. மற்றும் ஃபேன்ஸி விவிட் பிங்க் எனும் வகை வைரங்களில் இது பிரபலமான வைரமாக உள்ளது. இதன் எடை 59.6 கேரட் எடை கொண்டது.
Who has the costliest diamond in the world? How much is it worth?
Who has the costliest diamond in the world? How much is it worth?/உலகின் காஸ்ட்லியான வைரம் யாரிடம் உள்ளது.. எவ்வளவு மதிப்பு?