நடப்பு ஆண்டில் அலிபாபா நிறுவனம் அதன் ஊழியர்கள் தொகுப்பில் 6000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்தும் என்று கூறி வருகின்றது. இந்த நிலையில் தற்போது பல ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து வெளியான அறிக்கையின் படி, அலிபாபா நிறுவனம் கிட்டதட்ட 10000 பேரை, செலவினை குறைக்கும் விதமாக பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது சீனாவில் நிலவி வரும் மெதுவான வளர்ச்சிக்கு மத்தியில் பொருளாதாரம் சரிவினைக் கண்டு வருகின்றது. இதனால் விற்பனை சரிவினைக் கண்டுள்ளது. இதுவே பணி நீக்கத்த்திற்கு முக்கிய காரணமாகவும் உள்ளது. சீனாவின் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியில் இருப்பதற்கான முக்கிய சான்றாகவும் பார்க்கப்படுக்கிறது.
இந்தியாவின் 10 பணக்கார மாநிலங்கள் எது? தமிழ்நாட்டிற்கு எத்தனையாவது இடம்?
பணி நீக்கம்
சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தரவின் படி. 9241 பேரை ஜூன் காலாண்டில் பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதன் மொத்த ஊழியர் தொகுப்பில் 2,45,700 பேர் பணி புரிவதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல 2016க்கு பிறகு ஊழியர்களின் சம்பளமும் வீழ்ச்சியினை கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
வருவாய் சரிவு
இந்த பிரம்மாண்ட இ-காமர்ஸ் நிறுவனத்தின் நிகர வருமானம் 50% சரிவினைக் கண்டு, 22.74 பில்லியன் யுவானாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 45.14 பில்லியன் யுவனாகவும் இருந்தது.
சீனாவின் நிலவி வரும் மெதுவான வளர்ச்சிக்கு மத்தியில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் நிலவி வருகின்றன. இது மேற்கோண்டு வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் என்ன காரணம்?
மேலும் தொடர்ந்து அதிகரித்து வரும் மந்த நிலையை எதிர்கொள்ள பணியமர்த்தலை குறைத்தல், ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு உள்ளிட்ட வற்றின் மூலம் செலவினைக் குறைத்துள்ளது. இதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சீனாவின் கடுமையான நடவடிக்கை
சமீபத்திய காலமாக சீனாவின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பல்வேறு நிறுவனங்களும் அழுத்தத்தினை எதிர்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக பல நிறுவனங்களும் சரிவினைக் நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளன. குறிப்பாக சீனாவின் ஜீரோ பாலிசியானது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. அதோடு அரசின் கட்டுப்பாடுகள் அனைத்தும் சந்தையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு சீனாவின் எவர்கிரான்டே திவால் நிலைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
Alibaba nearly lay off 10,000 employees amid slowing economy
Alibaba nearly lay off 10,000 employees amid slowing economy/சுமார் 10,000 பேரை பணி நீக்கம் செய்த அலிபாபா.. கண்ணீர் விடும் ஊழியர்கள்!