புனே: கிளியின் தொடர் சத்தம் காரணமாக தனது நிம்மதி போய் விட்டதாக சீனியர் சிட்டிசன் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்
விலங்குகள் மற்றும் பறவைகள் மீது ஒருவர் புகார் அளிப்பது என்பது வெளிநாடுகளில் சாதாரண விசயமாக இருக்கலாம்.தற்போது அது போன்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தேறி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சிவாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் 72 வயதான சுரேஷ் ஷிண்டே. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் அக்பர்அம்ஜத் கான் இவர் ஆசைஆசையா கிளி ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த கிளி தொடர்ந்து சப்தம் போட்டு வந்துள்ளது. இது சுரேஷ் ஷிண்டேவிற்கு எரிச்சலை தந்துள்ளது. சப்தமிடும் கிளியின் தொல்லையை வெகு நாட்களாக பொறுத்திருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சுரேஷ் ஷிண்டே கிளியின் தொல்லை குறித்து காட்கி நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரில் அவர் தெரிவித்து இருப்பதாவது: தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் அக்பர் அம்ஜத்கான் என்பவர் கிளி ஒன்றை வளர்த்து வருகிறார். அவரது கிளி தொடர்ந்து சப்தமிட்டுகொண்டே உள்ளது. இது மூத்த குடிமகனுக்கு இடையூறு விளைவிக்கும் செயலாகும் என புகாரில் தெரிவித்து உள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் கூறுகையில் கிளியின் உரிமையாளர்களுக்கு எதிராக அமைதியை மீறுதல் மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. நாங்கள் விதிப்படி செயல்படுவோம் என கூறி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement