பொதுத்துறை நிறுவனங்களாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து 18,480 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளன.
ஏன்? எதனால் இவ்வளவு இழப்பு? என்ன தான் காரணம்? வாருங்கள் பார்க்கலாம்
பங்கு சந்தைக்கு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சில்லறை எண்ணெய் விற்பனையாளர்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் சர்வதேச சந்தையில் விலை அதிகரித்த போது கூட விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக அவர்களின் மார்ஜினில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
டாலர் முதல் CPI டேட்டா வரையிலான 5 முக்கிய காரணிகள்.. தங்கம் விலை எப்படியிருக்கும்?
மார்ஜினில் தாக்கம்
மத்திய அரசின் இந்த முடிவால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனங்களின் மார்ஜின் விகிதம் பெரியளவில் பாதிக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையில் மட்டும் அல்ல, கேஸ் விலையும் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இது சில்லறை விற்பனையாளர்கள் மத்தியில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவு இழப்பு தெரியுமா?
விலையில் மாற்றமில்லாவிட்டாலும் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தான் எண்ணெய் சுத்திகரிப்பாளார்கள் பெரும் இழப்பினை கண்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 1995.3 கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளது. இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் 10,196.94 கோடி ரூபாய் நஷ்டத்தினையும், பாரத் பெட்ரோலியம் 6290.8 கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளது.
பெரும் இழப்பு
ஆக மொத்தம் மேற்கண்ட நிறுவனங்கள் 18,480.27 கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளன. இந்த இழப்பானது இதுவரை கண்டிராத அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்கள் பெரும் இழப்பினை கண்டாலும், அரசு இதன் மூலம் பணவீக்கத்தினை பெரியளவில் கட்டுப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
பணவீக்கத்திற்கு இது தான் காரணம்
தற்போது பணவீக்கம் 7% என்ற லெவலில் இருக்க இதுவும் முக்கிய காரணம் எனலாம். இந்தியா இறக்குமதி சரசரியாக பேரலுக்கு 109 டாலராக இருந்தது. இது சில்லறை விற்பனையாளர்கள் மத்தியில் சுமார் 85 – 86 டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆக இதன் காரணமாக அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனங்கள் பெரும் இழப்பினை கண்டுள்ளன.
IOC, HPCL, BPCL post Rs.18,480 crore loss in June quarter
IOC, HPCL, BPCL post Rs.18,480 crore loss in June quarter/மத்திய அரசின் ஒற்றை முடிவு.. ரூ.18,480 கோடி இழப்பை கண்ட எண்ணெய் நிறுவனங்கள்.. ஏன்?