புதுடில்லி:நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் விரைவான தகவல் தொடர்புக்கு, ‘5ஜி’ சேவையைப் பயன்படுத்த, நம் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாடு முழுதும், ‘4ஜி’ பயன்பாட்டில் உள்ள நிலையில் விரைவில், ‘5ஜி’ சேவை அறிமுகமாக உள்ளது. இதற்கான ஏலம் சமீபத்தில் நிறைவு அடைந்தது.
எதிர்பார்ப்பு
இதில், 72 ஆயிரத்து 98 மெகாஹெர்ட்ஸில் 51 ஆயிரத்து 236 மெகாஹெர்ட்ஸ் மட்டும், 1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.செப்., – – அக்., மாதத்திற்குள் 5ஜி சேவைகள் துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும்போது, அதை எல்லையில் உள்ள படையினரின் தகவல் தொடர்புக்கு பயன்படுத்த ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.
பரிசீலனை
பாதுகாப்பு படைகளில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவது தொடர்பாக சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் பரிந்துரைகளை ராணுவம்,கடற்படை, விமானப்படை ஆகியவை பரிசீலித்து வருகின்றன. ‘எல்லையில் உள்ள நம் படையினருடன் முக்கியமான தகவல் பரிமாற்றத்துக்கு 5ஜி தொழில்நுட்பம் சிறப்பாக இருக்கும்’ என, இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.சீன ராணுவமும் எல்லை பகுதிகளில் 5ஜி தொழில்நுட்பத்தை படிப்படியாக பயன்படுத்தி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement