65 பிளஸ் வயதினரின் செக்ஸ் ஆர்வம் எப்படி?- கருத்துக் கணிப்பில் வெளியான சுவாரஸ்ய தகவல்!

40 பிளஸ் வயதை கடந்தவிட்டாலே செக்ஸ் வாழ்க்கையை கொஞ்சம் சொஞ்சமாக குறைத்துவிட்டு தங்களது பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காகவே தங்களின் நேரத்தை செலவிடுவதும், ஆன்மிகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தி கொள்வதும்தான் இந்தியாவில் பெரும்பாலானோரின் வாழ்க்கை முறை.

ஆனால் இதுவே பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் செக்ஸ் என்பது தங்களது தனிபட்ட விஷயம் என்றும், இதற்கு வயது ஒரு தடையல்ல என்பதுமே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. அத்துடன் மேலை நாடுகளில் பலருடன் உறவு வைத்து கொள்ளும் கலாசாரமும் சர்வசாதாரணம்.

பாலுறவுக்கு வயது ஒரு தடையில்லை என்ற மேலை நாட்டினரின் கருத்தை மெய்பிக்கும் விதத்தில் அமைந்துள்ளது சமீபத்தில் வெளியாகி உள்ள ஒரு ஆய்வு முடிவு.

பிரிட்டனை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று 65 வயதுக்கு மேற்பட்ட 2000-க்கும் மேற்பட்டோரிடம் இதுதொடர்பாக கருத்துக்கணிப்பை அண்மையில் மேற்கொண்டது. அதில் தெரிய வந்துள்ள சில சுவராஸ்ய தகவல்கள்:

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா!

* 65 வயதைக் கடந்தவர்களில் 52% பேர் தங்களது பாலுறவு போதுமானதாக இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்

*75 வயதை கடந்தவர்களில் 10 இல் ஒரு நபர், தாங்கள் 65 வயதை கடந்ததில் இருந்து பலருடன் பாலுறவு கொண்டிருந்ததாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.

*போதிய வாய்ப்புகள் கிடைக்காததன் காரணமாகவே தங்களது பாலுறவு தடைப்படுவதாக 65 வயதைக் கடந்தவர்களில் 6 இல் ஒருவர் தெரிவித்துள்ளனராம்.

பரபரப்பாக நடந்த டி20 போட்டி – திடீரென வெடித்த குண்டு.. அலறிய மக்கள்!

*80 வயதை கடந்தவர்களில், 6 இல் ஒருவர் மட்டுமே தங்களது பாலுறவு போதுமானதாக இருப்பதாக கூறியுள்ளனராம்.

பலர் நினைப்பதை காட்டிலும், வயது முதிர்ந்தவர்கள் பாலுறவில் அதிக நாட்டம் கொண்டுள்ளனர் என்பதையும், செக்ஸ் வாழ்க்கைக்கு வயது ஒரு தடை இல்லை என்பதையும் இந்த கருத்துக் கணிப்பு உணர்த்துவதாக கூறியுள்ளது அந்த தனியார் நிறுவன நிர்வாகம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.