India at CWG: Day 10 Live – கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி தொடங்கியது! தடகளத்தில் பதக்க மழை! குத்துச்சண்டையில் 3 தங்கம்!

162 ரன்கள் அடித்தால் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் கிடைக்கும்!

20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்துள்ளது.

பதக்கத்தை உறுதி செய்தார் ஷரத் கமல்!

Table tennis – Men’s singles: அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பால் ட்ரின்க்ஹாலை 4-2 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்!

Women’s cricket: இந்தியா vs ஆஸ்திரேலியா ( தங்கப்பதக்கத்துக்கான போட்டி)

10 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் குவித்துள்ளது!

Women’s cricket: இந்தியா vs ஆஸ்திரேலியா (தங்கப்பதக்கத்துக்கான போட்டி)

ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய தேர்வு செய்தது!

நிக்கத் சரீன் இதற்கு முன் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பிலும் சாம்பியன் ஆகியிருந்தார்!

உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடிய ஐந்து போட்டிகளின் முடிவுகள்:

5-0, 5-0, 5-0, 5-0, 5-0

காமன்வெலத்தில் விளையாடிய நான்கு போட்டிகளின் முடிவுகள்:

எதிர்த்து விளையாடியவர் பாதியில் வெளியேறினார், 5-0, 5-0, 5-0!

குத்துச்சண்டையில் மூன்றாவது தங்கப்பதக்கம்!

Boxing -Women’s 48-50 kg: நிக்கத் சரீன் இறுதிப்போட்டியை 5-0 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்!

பேட்மின்டனில் நான்காவது பதக்கம் உறுதி!

Badminton – Men’s doubles: சாத்விக் – சிராக் ஜோடி அரையிறுதியில் 21-6, 21-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி!

Badminton – Women’s doubles: த்ரீசா – காயத்ரி ஜோடி அரையிறுதியில் தோல்வி. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்குபெறுவார்கள்!

Athletics – Women’s 4x100m relay: இந்திய அணி ஐந்தாவது இடம் பிடித்தது!

Badminton men’s singles: அரையிறுதியில் 21-13, 19-21, 10-21 என்ற செட் கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி! வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடுவார்!

Table Tennis Women’s singles: வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஸ்ரீஜா அக்குலா 3-4 என்ற செட் கணக்கில் போராடித் தோல்வி!

ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றார் ஷில்பா ராணி!

Women’s javelin throw: 60.00 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார் ஷில்பா ராணி!

லக்ஷ்யா சென்னிற்கு பதக்கம் உறுதி!

Badminton men’s singles: அரையிறுதியில் 21-10, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் லக்ஷ்யா சென் வெற்றி!

Race walk-இல் இன்னொரு பதக்கம்!

Men’s 10000m race walk: சந்தீப் குமார் 10 கிலோமீட்டரை 38.49.21 நிமிடத்தில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்!

ட்ரிபிள் ஜம்ப்பில் இரண்டு பதக்கங்கள்!

Men’s triple jump: எல்டோஸ் பால் தங்கப்பதக்கத்தையும் அப்துல்லா அபுபக்கர் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். எல்டோஸ் 17.03 மீ நீளமும் அப்துல்லா 17.02 மீ நீளமும் தாண்டி முதல் இரண்டு பதக்கங்களைத் தட்டிச் சென்றனர். இதுமட்டுமல்லாமல் 16.89 மீ நீளம் தாண்டி நான்காவது இடத்தை பிடித்ததும் இந்திய பிரவீன் சித்ரவேல்தான்!

குத்துச்சண்டையில் இரண்டாவது தங்கப் பதக்கம்!

Boximg – Men’s 48-51 kg: இறுதிப் போட்டியை வென்று தங்கப்பதக்கம் வென்றார் அமீத் பங்கல்!

குத்துச்சண்டையில் முதல் தங்கப்பதக்கம்.

Boxing – Women’s 45-48 kg: நீத்து இறுதி போட்டியில் வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்!

காமன்வெல்த்தில் 16 ஆண்டுகளுக்கு பின் இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு பதக்கம்!

Women’s Hockey: இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு வெண்கலப் பதக்கம்!

நியூசிலாந்துக்கு எதிரான வெண்கலப் பதக்கப் போட்டியில் முழு நேர முடிவில் 1-1 என்று கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தனர். பின்னர் நடந்த பெனால்டி கார்னரில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி!

பி.வி.சிந்துக்கு பதக்கம் உறுதி.

Badminton Women’s singles: பேட்மிட்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் பிவி சிந்து வெற்றி. 21-19, 21-17 என்ற நேர்செட்களில் சிங்கப்பூரின் இயோ ஜியா மின்னை தோற்கடித்தார். இதன் மூலம் அவருக்குப் பதக்கம் உறுதியாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.