உலகிலேயே இந்தியாவில் தான் பெண் விமானிகள் அதிகம் பேர் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மொத்த விமானிகளில் பெண்கள் 15 சதவீதம் உள்ளனர்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த சதவீதம் அதிகமாக உள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக அயர்லாந்தில் 10 சதவீதம் பெண் விமானிகளும், தென் ஆப்ரிக்காவில் 9.8 சதவீதம் பெண் விமானிகளும் உள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது, 2025 ஆம் ஆண்டிற்குள் 220 புதிய விமான நிலையங்களை திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது போன்ற காரணங்களால் விமானிகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.
அதனை நிவர்த்தி செய்யும் விதமாக விமான லைசென்ஸ் நடைமுறையை சுலபமாக்கவும், 15 புதிய விமான ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.