மும்பை: மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் புதிதாக 18 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளார். மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பகத்சிங் கோஷாரி புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மகாராஷ்டிரா மாநில சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக உத்தவ்தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பாஜக ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கூட்டணி அரசு ஜூலை 1ந்தேதி பதவி ஏற்றது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜவின் பட்நவிஸ் துணை முதல்வராக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே சட்டமன்றத்தில் மெஜிாரிட்டியை நிருபித்தார். தொடர்ந்து, அமைச்சர்கள் பதவி தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் முடிவு எட்டப்பட்டது.
இந்த நிலையில், இன்று 18 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த 9 பேரும், சிவசேனா கட்சியை சேர்ந்த 9 பேரும் என மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். அவர்களுக்கான துறை விவரம் இன்று வெளியாகவில்லை.
இன்று பதவி ஏற்றுள்ள அமைச்சர்கள் விவரம்: