குறிப்பிட்ட சமூகத்தினரை தேடித் தேடி கொல்லும் மர்ம கொலைகாரன்: உயிர் பயத்தில் மொத்த நகரம்


*குறிப்பிட்ட சமூகத்தினர் இலக்கு வைத்து படுகொலை, வெள்ளிக்கிழமை நான்காவது நபரை குறிவைத்த சீரியல் கொலையாளி.

*பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறியவர்கள். ஒருவர் தனது மனைவியை அமெரிக்காவிற்கு அழைத்து வர திட்டமிட்டிருந்தார்.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிய குடியேற்றவாசிகள் இலக்கு வைத்து கொல்லப்படும் பகீர் சம்பவத்திற்கு பிறகு இஸ்லாமிய சமூகம் பயத்தில் வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூ மெக்சிகோ மாகாணத்தின் அல்புகெர்கி நகரத்திலேயே குறித்த மர்ம கொலைகள் அரங்கேறி வருகிறது.
இதுவரை மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டுக்கு நால்வர் பலியாகியுள்ளனர்.

குறிப்பிட்ட சமூகத்தினரை தேடித் தேடி கொல்லும் மர்ம கொலைகாரன்: உயிர் பயத்தில் மொத்த நகரம் | Albuquerque Community Rattled By Serial Killer

@CNN

நால்வரும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தாலின் இருந்து குடியேறியவர்கள். தெருக்களிலும் வாகன நிறுத்துமிடங்களுக்கு அருகிலும் தனித்தனியாக இரவு நேரங்களில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தை தொடர்ந்து, அடுத்த இலக்கு நாமாக இருக்கலாம் என்ற அச்சத்தில் உள்ளனர் இப்பகுதி இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
மேலும், ஆண்கள் இரவில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் எனவும் ஜோடியாக மட்டுமே நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தற்போது அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மட்டுமின்றி இஸ்லாமியர்களுக்கு சொந்தமான சொத்துக்களை அந்த நபர் தாக்கவில்லை, தனியாக சிக்கும் அல்லது குறிவைத்துள்ள நபர்களையே மர்ம நபர் கொல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்ட சமூகத்தினரை தேடித் தேடி கொல்லும் மர்ம கொலைகாரன்: உயிர் பயத்தில் மொத்த நகரம் | Albuquerque Community Rattled By Serial Killer

@Interfaith

இருப்பினும் கடைகள் மற்றும் தொழில் கூடங்கள் அனைத்தும் இரவுக்கு முன்னரே மூடப்படுகிறது.
இந்திய பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் தொடர்பான நபர்களை மட்டுமே அந்த நபர் இலக்கு வைத்துள்ளது தற்போது பீதியை கிளப்பியுள்ளது.

கொலைகாரனை அடையாளம் காணாதவரையில், இப்பகுதியில் நிம்மதி என்பது இருக்காது என்றே மக்கள் கூறுகின்றனர்.
கொல்லப்பட்ட இருவர் தங்கள் மனைவியை அமெரிக்காவுக்கு அழைத்துவரும் திட்டத்தில் இருந்துள்ளனர்.

கடைசியாக கொல்லப்பட்ட நபர் பாகிஸ்தானின் ஷியா சமூகத்தை சேர்ந்தவர். 2016ல் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்துள்ளார். கடந்த மாதம் அவருக்கு உத்தியோகப்பூர்வமாக குடியுரிமை கிடைத்த நிலையில், தமது மனைவியை அழைத்துவர முடிவு செய்திருந்தார் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.