கொழும்பில் நடைபெற்ற 55வது ஆசியான் தின கொண்டாட்டத்தில் வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன பங்கேற்பு

2022 ஆகஸ்ட் 08ஆந் திகதி கொழும்பில் உள்ள இந்தோனேசியத் தூதரகத்தில் நடைபெற்ற 55வது ஆசியான் தினத்தில் பிரதம அதிதியாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன கலந்து கொண்டார்.

இந்நிகழ்வை இந்தோனேசியத் தூதுவர் டெவி குஸ்டினா டோபிங் மற்றும் கொழும்பில் உள்ள 4 ஆசியான் உறுப்பு நாடுகளின் தூதுத் தலைவர்களான மலேசியாவின் உயர்ஸ்தானிகர் டான் யாங் தாய், மியன்மார் தூதுவர் ஹன் து, தாய்லாந்து தூதுவர் போஜ் ஹர்ன்போல் மற்றும் வியட்நாம் தூதுவர் ஹோதி தான் ட்ரூக் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

தனது கருத்துக்களில், இலங்கை மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையிலான வலுவான உறவுகளை நினைவு கூர்ந்த வெளியுறவுச் செயலாளர் விஜேவர்தன, பண்டைய காலத்தில் இலங்கை முக்கியமானதொரு கடல்சார் பொருளாதார மையமாக உலகளவில் அறியப்பட்டதாகக் புறிப்பிட்டார். பல நூற்றாண்டுகள் பழமையான இந்த இணைப்புக்களை தொடர்வதில், இன்று வெற்றிகரமான ஆசியான் பொருளாதாரங்களுடன் இலங்கை பங்காளியாவதற்கு பல வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆசியான் பிராந்திய மன்றத்தில் கலந்துகொள்வதற்காக அண்மையில் கம்போடியாவிற்கு விஜயம் செய்திருந்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, ஆசியான் உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் உரையாடல் பங்காளிகளுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டதை வெளியுறவுச் செயலாளர் எடுத்துரைத்தார். ஆசியான் பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிர் அளித்தல், உணவு, ஆற்றல் மற்றும் காலநிலை பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பிராந்திய பாதுகாப்புச் சூழலை நிவர்த்தி செய்வதற்கான நிலையான எதிர்காலத்தை நோக்கி செயற்படுவதனால், ஆசியான் சட்டம் – ‘ஒன்றாக சவால்களை எதிர்கொள்ளுதல்’ என்பது ஒரு பொருத்தமான கருப்பொருளாகும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உபசரணைப் பிரிவின் பிரதானி செனரத் திசாநாயக்க மற்றும் தென்கிழக்காசியப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சத்யா ரொட்ரிகோ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், அதனைத் தொடர்ந்து வரவேற்பு உபசார நிகழ்வும் இடம்பெற்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஆகஸ்ட் 09

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.