செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவையொட்டி, சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் காவல்துறை அறிவித்துள்ளது.
நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் நிறைவு விழாவையொட்டி, ராஜாமுத்தையா சாலை, ஈ.வே.ரா. பெரியார் சாலை, மத்திய சதுக்கம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்கொள்ளும் விதமாக, பொதுமக்கள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், நண்பகல் ஒரு மணிமுதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து ராஜாமுத்தையா சாலை வழியே வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது.
ஈ.வி.கே. சம்பத் சாலை, ஜெர்மயா சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்றும் போக்குவரத்துத் காவல் துறை அறிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM