டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான “டாப்கன் மேவ்ரி ” உலகளவில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்து சாதனை படைத்துள்ள நிலையில், உள்நாட்டு வசூல் பட்டியலில் 7வது இடத்தில் இருந்த டைட்டானிக்கை பின்னுக்கு தள்ளி சாதனையை முறியடித்துள்ளது.
30 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான டாம்குரூஸின் “டாப்கன் மேவ்ரிக்” இதுவரை அமெரிக்காவில் மட்டும் 662 மில்லியன் டாலர் வசூலை ஈட்டியுள்ளது.
சுமார் 170 மில்லியன் டாலர் செலவில் தயாரான இந்தப் படம் தற்போது உலகம் முழுவதும் ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் வசூலை குவித்துள்ளது.