தங்கம் விலையானது சற்று வலுவானதாக காணப்பட்டாலும், சர்வதேச சந்தையில் தற்போது சற்று குறைந்து காணப்படுகின்றது. எனினும் தற்போது 1801 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது.
பத்திர சந்தையானது தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காணலாமோ என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இதற்கிடையில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
தடுமாறும் தங்கம் விலை.. இன்று வாங்கலாமா.. விலை எப்படியிருக்கு?
வட்டி அதிகரிக்கலாம்
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதம் ஏற்கனவே சிலமுறை அதிகரித்துள்ள நிலையில், இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது மேற்கொண்டு டாலரின் மதிப்பினை ஊக்கப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்தின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
டாலரின் ஏற்றம்
அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது மீண்டும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. இது மற்ற கரன்சிதாரர்களுக்கு தங்கத்தினை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. இதனால் மற்ற கரன்சிதாரர்களின் முதலீடுகள் குறையலாம். இது தங்கம் விலை குறைய காரணமாக அமையலாம்.
பணவீக்கம்
தொடர்ந்து பணவீக்கமானது அதிகரித்து வரும் நிலையில் இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். மேற்கோண்டு உக்ரைன் ரஷ்யா பிரச்சனை, தாய்வான் – சீனா பிரச்சனை என பலவும் தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. இதற்கிடையில் பல நாடுகளிலும் ரெசசன் வரலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 3.55 டாலர்கள் குறைந்து, 1801.65 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலை சற்று அதிகரித்து 20.688 டாலராக அதிகரித்து காணப்படுகின்றது. தங்கம் விலை சற்று குறைந்து காணப்படும் நிலையில், வெள்ளி விலை சற்று தடுமாற்றத்தில் தான் காணப்படுகின்றது. இந்திய சந்தையானது இன்று விடுமுறையாகும்.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து, 4880 ரூபாயாகவும், இதே சவரனுக்கு240 ரூபாய் அதிகரித்து, 39,040 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 34 ரூபாய் அதிகரித்து, 5324 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 42,592 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 53,240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை இன்று இதுவரையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 63 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 630 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 63,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
- 22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
- சென்னையில் இன்று – ரூ.48,800
- மும்பை – ரூ.47,950
- டெல்லி – ரூ.48,100
- பெங்களூர் – ரூ.48,000
- கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,800
gold price on 9th August 2022: Gold prices steady amid lower bond yields
gold price on 9th August 2022: Gold prices steady amid lower bond yields/தங்கம் விலை இன்றும் ஏற்றம்.. என்ன காரணம்.. இனி குறையவே குறையாதா?