தைவானை சுற்றி ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள சீனா மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது என தாம் நினைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை அடுத்து அந்த தீவை சுற்றி ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ள சீனாவின் நடவடிக்கை குறித்து முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஜோ பைடன், ஆத்திரமூட்டும் வகையில் செயல்படும் சீனாவுக்கு தொடக்கத்தில் இருந்து கண்டனம் தெரிவித்து வருவதாக கூறியுள்ளார்.
சீனாவின் ராணுவ ஒத்திகை கவலையளிக்கும் வகையில் இல்லை என்றபோதும் பயிற்சி மேற்கொண்டுள்ள இடத்தைவிட்டு நகர்வது தான் கவலை அளிக்கிறது என்றும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.