பரிசு பொருளை விற்று ரூ.286 கோடி ஆட்டை:மாஜி பிரதமர் மீது புகார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத்,-பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அரசின் கருவூலத்தில் இருந்து விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை பணம் செலுத்தாமல் எடுத்து, 286 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாக, அந்நாட்டு தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

latest tamil news

நம் அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமராக 2018 ஆகஸ்டில் பதவியேற்ற இம்ரான் கான், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் 2022 ஏப்ரலில் பதவி விலகினார். இதையடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் இதர கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியை ஏற்றுள்ளார்.



குற்றச்சாட்டு

இம்ரான்கான் பிரதமர் பதவி வகித்த போது, வெளிநாட்டு பிரமுகர்கள், தலைவர்கள் பரிசாக வழங்கிய விலை உயர்ந்த பொருட்களை கருவூலத்துக்கு அனுப்பவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பதவியில் இருந்து விலகி பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறும்போது விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை எடுத்துச் சென்று விட்டார் எனவும் ஆளும் கூட்டணி அரசு குற்றம் சாட்டியுள்ளது.பிரதமருக்கு வரும் பரிசுப் பொருட்களை அரசின் கருவூலத்தில் ஒப்படைத்து விட வேண்டும். அதில் ஏதாவது பொருட்களை விரும்பினால் அதற்குரிய பணத்தை கருவூலத்தில் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தப் பொருளுக்கான விலை மதிப்பை ஏல முறையில் நிர்ணயிப்பர். இதுவே பாகிஸ்தானில் நடைமுறையில் உள்ளது. ஆனால், இம்ரான் கான் விலை உயர்ந்த மூன்று கைக்கடிகாரங்கள், வைர நகைகள், தங்க வளையல்கள் உட்பட சில பொருட்களை பணம் செலுத்தாமல் எடுத்துச் சென்று, அவற்றை 286 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

latest tamil news

‘சம்மன்’

இதையடுத்து, ஆக., 18ல் விசாரணைக்கு ஆஜராகும்படி தேர்தல் ஆணையம் இம்ரான் கானுக்கு ‘சம்மன்’ அனுப்பிஉள்ளது. இது குறித்து இம்ரான்கான் கூறுகையில், “அவை எனக்கு வந்த பரிசுப் பொருட்கள்; அதை விற்க எனக்கு உரிமை உள்ளது,” என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.