போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது – தைவான் குற்றச்சாட்டு!

தைவான் மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருவதாக, அந்நாட்டு அரசு குற்றம் சாட்டி உள்ளது.

தைவான் நாட்டை தங்களது நாட்டின் ஓர் அங்கம் என்று கூறி சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவான் நாட்டிற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அண்மையில் தைவானுக்குச் சென்றார். இதனால் கடும் கோபம் அடைந்த சீனா, போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி மிரட்டல் விடுத்து வருகிறது.

இந்நிலையில் அச்சுறுத்தி வரும் சீனாவுக்கு எதிராக தைவானும் ஏவுகணைகளை வீசி போர் பயிற்சியை தொடங்கி உள்ளது. போர் ஒத்திகை ஏற்கனவே திட்டமிடப்பட்டது தான் எனவும் பதிலடி அல்ல எனவும் தைவான் அரசு விளக்கம் அளித்துள்ளது.

இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: குழந்தைகள் உட்பட 51 பேர் பலி!

இது குறித்த தைவான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் வூ கூறுகையில், “தைவான் மீதான படையெடுப்புக்குத் தயாராக, சீனா பெய்ஜிங் தீவைச் சுற்றி வான் மற்றும் கடல் பயிற்சிகளைப் பயன்படுத்தி படையெடுப்புக்குத் தயாராகி வருகிறது. தைவானில் பொது மக்களின் மன உறுதியை பலவீனப்படுத்தும் வகையில் பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகள் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள், சைபர் தாக்குதல்கள், தவறான தகவல் பிரசாரம் மற்றும் பொருளாதார வற்புறுத்தல் போன்றவற்றை சீனா வழி நடத்துகிறது” என குற்றம் சாட்டி உள்ளார்.

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவான் ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.