முகேஷ் அம்பானி: ஓரே வருடத்தில் ரூ.30000 கோடி.. கடுப்பான போட்டி நிறுவனங்கள்..!

இந்தியாவின் 2வது பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி அடுத்தடுத்து பல துறையில் புதிதாக இறங்கினாலும், தனது பழைய வர்த்தகத்தைத் தொடர்ந்து வலிமைப்படுத்த வேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறது முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகம்.

ரிலையன்ஸ் இண்டல்டரீஸ் கிரீன் எனர்ஜி துறைக்குள் முழுமையாக நுழையும் முன் வளர்ந்து வரும் ரீடைல் வர்த்தகத்தைப் புதிய உயரத்திற்குக் கொண்டு வர திட்டமிட்டு 2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்துள்ளார் முகேஷ் அம்பானி.

ஏற்கனவே ஜியோ நிறுவனத்தின் நிர்வாகம் ஆகாஷ் அம்பானி கையில் சென்றுள்ள நிலையில், தற்போது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தை ஈஷா அம்பானி கையில் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருகிறது.ய

12 வயதில் 3 ஆப்… கின்னஸ் சாதனை செய்த சிறுவன்.. கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்க வாய்ப்பு!

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல் 2022 ஆம் நிதியாண்டில் மட்டும் கடைகளை விரிவாக்கம் செய்யவும், நிறுவனங்களைக் கைப்பற்றவும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், புதிய கூட்டணி உருவாக்கவும் சுமார் 30000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

30000 கோடி ரூபாய்

30000 கோடி ரூபாய்

30000 கோடி ரூபாய் என்றால் நாட்டின் முன்னணி ரீடைல் நிறுவனமான டிமார்ட் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் -ன் வருடந்திரா விற்பனை அளவு, இது மட்டுமா அடுத்த 5 வருடத்தில் டாடா-வின் டிரென்ட், ஆதித்யா பிர்லா பேஷன்ஸ் & ரீடைல், ஷாப்பர்ஸ் ஸ்டாப், ஸ்பென்சர் ரீடைல், வி மார்ட் ரீடைல் ஆகிய நிறுவனங்களின் மொத்த வருவாயில் 70 சதவீதம்.

நிறுவன கைப்பற்றல்
 

நிறுவன கைப்பற்றல்

ரிலையன்ஸ் ரீடைல் 2022 ஆம் நிதியாண்டில் நிறுவன கைப்பற்றல் மற்றும் வர்த்தகக் கூட்டணிக்காகச் சுமார் 9700 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதில் போர்ட்டிகோ, மில்ஸ் பேஸ்கட், ஜஸ்ட் டயல், ரிது குமார், Amante, dunzo, ஜெய்சூர்யா, கலாநிகேத்தன், clovia ஆகிய நிறுவனங்கள் அடங்கும்.

ஷாப்பர்ஸ் ஸ்டாப்

ஷாப்பர்ஸ் ஸ்டாப்

இதேபோல் ரிலையன்ஸ் ரீடைல்-ன் சக போட்டி நிறுவனமான ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனம், புதிய கடைகள் திறப்புகள் மற்றும் இ-காமர்ஸ் வர்த்தகத்திற்காக FY22 இல் 255 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது என்று கூறியுள்ளது.

டாடா ட்ரெண்ட்

டாடா ட்ரெண்ட்

இதேபோல் டாடா குழுமத்தின் ட்ரெண்ட் ஒரு வெஸ்ட்சைட் ஸ்டோருக்கு சுமார் ரூ. 6-7 கோடி முதலீடு செய்வதாகவும், FY22 இல் 36 புதிய விற்பனை நிலையங்களைச் சேர்த்ததாகவும் கூறியுள்ளது.

BigBasket மற்றும் 1MG

BigBasket மற்றும் 1MG

டாடா நிறுவனம் கடந்த நிதியாண்டில் ₹11,872 கோடியை டாடா டிஜிட்டல் வர்த்தகப் பிரிவில் குவித்துள்ளது, இந்நிறுவனம் சூப்பர் செயலியான Tata Neu அறிமுகம் செய்தது மட்டும் அல்லாமல் BigBasket மற்றும் e-pharmacy நிறுவனமான 1mg ஆகியவற்றைக் கைப்பற்றியது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சில்லறை வணிகத்தில் 2022ஆம் நிதியாண்டில் கிட்டத்தட்ட 8 மில்லியன் சதுர அடி ரீடைல் வர்த்தகத்திற்காகச் சேர்க்கப்பட்டு உள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

இதன் மூலம் மொத்த Retail Business space 41.6 மில்லியன் சதுர அடிக்கு மேல் சென்றுள்ளது. மேலும் ரிலையன்ஸ் ரீடைல் 2,500 புதிய கடைகளையும் 11.1 மில்லியன் சதுர அடி அளவிலான கிடங்குகள் இடத்தையும் சேர்த்தது 2022ஆம் நிதியாண்டில் சேர்த்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reliance Retail alone invested Rs 30,000 crore in Fy22; Equal to DMART Annual sales

Reliance Retail alone invested Rs 30,000 crore in Fy22; Equal to DMART Annual sales முகேஷ் அம்பானி: ஓரே வருடத்தில் ரூ.30000 கோடி.. கடுப்பான போட்டி நிறுவனங்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.