கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ் ,சாலினி தம்பதியினர். இவர்களது ஐந்து வயது மகள் இனியா.
கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் யூ.கே.ஜி பயின்று வரும் இனியா அபார திறன் கொண்டவர். அனைத்து வகை காய்கறிகள் – பழங்கள் – நிறங்கள் – மற்றும் பொருட்களின் பெயர்களை மிகச்சரியாக கூறினார்.
இந்த நிலையில் 10 நிமிடங்களில் ஆங்கிலத்தில் உள்ள 50 குழந்தைகளுக்கான பாடல்களை பாடி அசத்தியுள்ளார் இனியா.
இவரது அபார நியாபகத்திறனை அங்கீகரித்துள்ளது, இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ். சிறுமியின் சாதனை இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் சிறுமி இனியா “எனது பள்ளி ஆசிரியர்களும், வீட்டில் எனது பெற்றோரும் அளித்த பயிற்சி காரணமாக என்னால் அனைத்து பாடல்களையும் நியாபகம் வைத்துக்கொள்ள முடிகிறது. இதற்கு அடுத்து பல்வேறு சாதனைகளை செய்ய ஆசை” என்றார் மழலை குரலில்.
மாநகராட்சி பள்ளியில் படிக்கும் சிறுமி 10 நிமிடங்களில் குழந்தைகளுக்கான 50 பாடல்களை கூறி அசத்தியுள்ளது கோவை மக்களை பெருமையடைய செய்துள்ளது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“