Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
இந்திய அணி அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், அஸ்வின், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சாஹல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஓபன் பி அணியில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். 10வது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் சிந்த்ரோவுக்கு எதிரான போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா தனது 77வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
காமன்வெல்த் 2022
பர்மிங்ஹாம் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் கடைசி நாளில் இந்தியா 4 தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. இதன்மூலம், மொத்தம் 22 தங்கம் உள்பட 61 பதக்கங்களுடன் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா 67 தங்கத்துடன் முதலிடத்தையும், போட்டியை நடத்திய இங்கிலாந்து 57 தங்கத்துடன் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டம்
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும். கிராம சபை கூட்டத்தின் அறிக்கையை வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது. இதில், மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி கலந்து கொள்கிறார். விழாவில், 600-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் கண்கவர் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் மாணவிகள் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதி ரூ.1000 வரவு வைக்க ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.