- நேற்று அண்டோனிவ்ஸ்கி பாலம் உக்ரைனிய படைவீரர்களால் சுற்றிவளைக்கப்பட்டது.
- கெர்சன் பகுதியில் இருந்து ரஷ்ய ராணுவ குடும்பங்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர்.
கெர்சன் பகுதியில் உக்ரைன் நாட்டு ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலை அடுத்து அந்த பகுதிகளில் இருந்து ரஷ்ய ராணுவத்தின் குடும்பங்கள் பீதியில் தப்பி ஓடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனின் அண்டோனிவ்ஸ்கி மற்றும் ககோவ்ஸ்கி பாலங்களை உக்ரைன் ராணுவம் சில நாட்களாக பலமாக தாக்கி வருகிறது.
இந்தநிலையில் அண்டோனிவ்ஸ்கி பாலம் நேற்று இருபுறமும் சூழப்பட்டு உள்ளூர்வாசிகள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
AP Photo
இந்த பாலம் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு முக்கிய விநியோக பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், உக்ரைன் ராணுவத்தின் இந்த தாக்குதலால் எழுந்துள்ள பீதியை தொடர்ந்து, ரஷ்ய ராணுவத்தின் குடும்பங்கள் கெர்சன் நகரத்தை விட்டு வேகமாக வெளியேற தொடங்கி இருப்பதாக அப்பகுதியின் மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய நிலக்கரி இறக்குமதி நிறுத்தம்…ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியா அதிரடி முடிவு
மேலும் நாளுக்கு நாள் உக்ரைன் படையினரின் தாக்குதல் அதிகரித்து வருவதால் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் பீதியடையத் தொடங்கியுள்ளனர் என்று மற்றொரு அறிக்கை தெரிவித்துள்ளது.
AP Photo