சான் பிரான்சிஸ்கோ: கிட்டத்தட்ட 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்த சில மாதங்களுக்குப் பிறகு, சத்யா நாதெள்ளாவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முறை அதன் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட R&D திட்டங்களில் ஒன்றிலிருந்து பணி நீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்டின் மார்டன் லைஃப் எக்ஸ்பிரியன்ஸ் (MLX) குழுவில் கூடுதல் பணி நீக்கம் அதிகரித்துள்ளன என்று பிசினஸ் இன்சைடர் அறிக்கை முதலில் குறிப்பிட்டது. இந்த பிரிவு 2018 ஆம் ஆண்டில் “நுகர்வோரை மீண்டும் வெல்ல வேண்டும்” என்பதை குறிக்கோளாகக் கொண்டது. “மாடர்ன் லைஃப் எக்ஸ்பீரியன்ஸ் குழுவில் உள்ள சுமார் 200 பணியாளர்கள் 60 நாட்களுக்குள் நிறுவனத்தில் வேறொரு பவேலை தேடிக் கொள்ள வேண்டும் அல்லது ராஜினமா செய்ய வேண்டும்” என்று அறிக்கை கூறுகிறது.
கடந்த மாதம் 1,800 ஊழியர்கள் பணிநீக்கம்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து மேலதிக விவரங்களை வழங்க மறுத்துவிட்டார், ஆனால் பணிநீக்கங்கள் நிகழ்ந்தன என்பதை மறுக்கவில்லை. கடந்த மாதம், மைக்ரோசாப்ட் “மறுசீரமைப்பு நடவடிக்கையின்” ஒரு பகுதியாக ஊழியர்களை பணிநீக்கம் செய்த முதல் தொழில்நுட்ப நிறுவனமாக ஆனது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிநீக்கங்கள் அதன் அலுவலகங்கள் மற்றும் தயாரிப்புப் பிரிவுகளில் உள்ள 1,80,000 பணியாளர்களில் கிட்டத்தட்ட 1 சதவீத பணியாளர்களை இந்த முடிவு பாதித்தது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ், டீம்ஸ் மற்றும் ஆபீஸ் பிரிவுகளில் வேலைக்கு ஆட்கள் எடுப்பது மிகவும் குறைந்து விட்டது. தற்போதைய பொருளாதார மந்தநிலையில் பணியாளர்களை பணிநீக்கம் செய்த அல்லது பணியமர்த்துவதை குறைத்த் பிற தொழில்நுட்ப நிறுவனங்களில் Google, Meta, Oracle, Twitter, Nvidia, Snap, Uber, Spotify, Intel மற்றும் Salesforce போன்றவை அடங்கும்.
மேலும் படிக்க | B.COM, M.COM, BBA, MBA முடித்தவர்களுக்கு அமேசான் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!
உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள், மந்தநிலை குறித்த அச்சம் காரணமாக தங்கள் செலவினங்களைக் குறைக்க முடிவு செய்தன. இதை அடுத்து, வேலை ஆட்களை நியமிப்பதை மிகவும் குறைத்து விட்டன அல்லது ஆட்குறைப்புன் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனம்: கடுமையான உலகளாவிய மேக்ரோ பொருளாதார நிலைமைகள் காரணமாக, 2023 ஆம் ஆண்டிற்கான வேலைக்கு ஆட்கள் எடுப்பதை குறைக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. நிறுவனம் சில நிலைகளில் ஆட்களை பணிக்கு எடுக்கப்போவதில்லை என்று கூறியுள்ளது.
கூகுள்: கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இந்த ஆண்டு புதிதாக ஆட்களை பணியில் அமர்த்தும் எண்ணம் இல்லை என ஊழியர்களுக்கு தெரிவித்திருந்தார்.
ஃபேஸ்புக்: மெட்டா (முன்னாள் ஃபேஸ்புக்) “கடுமையான காலங்கள்” எதிர் நோக்க நேரிடும் என்று ஊழியர்களை எச்சரித்துள்ளது மற்றும் சில பணிகளுக்கு வேலைக்கு ஆட்களை எடுக்கப்போவதில்லை என அறிவித்தது. தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியை எதிர்பார்ப்பதாக ஊழியர்களிடம் கூறினார்.
மேலும் படிக்க | Bank Holidays August 2022: இந்த வாரம் தொடர்ந்து 6 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ