பெங்களூரு : உதவி பேராசிரியர் தேர்வு வினாத்தாள் கசிந்த விஷயத்தில், 40 பேரிடம் சி.சி.பி., போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.கர்நாடகாவில் காலியாக இருந்த 1,242 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு மார்ச் 12ம் தேதி எழுத்து தேர்வு நடந்தது. தேர்வுக்கு முன் வினாத்தாள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக, சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், தார்வாட் பல்கலைக்கழக பதிவாளர் நாகராஜ், அவரது உதவியாளர் சவும்யா ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.மல்லேஸ்வரம் போலீசார் இருவர் மீதும் குற்றஞ்சாட்டி, நீதிமன்றத்தில் ஏற்கனவே முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கிடையில், கசிந்த வினாத்தாள் பயன்படுத்தி யார், யார் தேர்வு எழுதினர் என்பது குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது, 40 பேர் வினாத்தாளை பகிர்ந்து கொண்டு தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.இவர்களை சி.சி.பி., போலீசார் பெங்களூருக்கு வரவழைத்து தீவிர விசாரணை நடத்துகின்றனர். மேலும் பலர் சிக்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எஸ்.ஐ., தேர்வு முறைகேடு போன்று, உதவி பேராசிரியர் தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதால், பின்னணியில் முக்கிய புள்ளிகள் இருக்கின்றனரா என விசாரிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement