ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளமே ரூ.63 லட்சம்; வைரலாகும் கிராவிட்டி பேமென்ட்ஸ் நிறுவன CEO!

பொதுவாக எல்லோருக்கும் நல்ல சம்பளத்திற்குத்தான் வேலைக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் எதிர்பார்த்த சம்பளம் என்பது எல்லாருக்குமே கிடைத்துவிடுவது இல்லை. அதுவும் வேலைக்குச் சேரும் தொடக்கத்தில் மிகக்குறைந்த ஊதியம்தான் வழங்கப்படும். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்களது ஊழியர்களுக்குக் குறைந்தபட்சமாக வருடத்திற்கு 80,000 அமெரிக்க டாலர்களை (ரூ.63 லட்சம்) வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின், சியாட்டலில் உள்ள கிராவிட்டி பேமெண்ட்ஸ் (Gravity Payments) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் ப்ரைஸ் (Dan Price). இவர் கடந்த 2004-ம் ஆண்டு தன்னுடைய மூத்த சகோதரரான லூகாஸ் என்பவருடன் இணைந்து இந்த நிறுவனத்தைத் துவங்கினார்.

டான் ப்ரைஸ் | கிராவிட்டி பேமென்ட்ஸ் நிறுவன CEO

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் டான் ப்ரைஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது வைரலாகி உள்ளது. அந்தப் பதிவில் அவர், தங்களது ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக வருடத்திற்கு 80,000 அமெரிக்க டாலர்களை, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 63 லட்ச ரூபாயை வழங்கிவருவதாகத் தெரிவித்திருக்கிறார். இதேபோல் பிற நிறுவனங்களும் அவர்களது ஊழியர்களுக்கு நியாயமான முறையில் ஊதியத்தை வழங்க முன்வரவேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் எங்கள் நிறுவனத்தின் பணியாளர்கள் எங்கு இருந்து வேண்டுமானாலும் தங்கள் பணிகளைச் செய்யலாம் (Remote Workplace). ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு போன்றவற்றையும் அளித்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் ஒரு வேலைக்கு மட்டும் 300க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் வைரலான இந்தப் பதிவிற்குப் பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.