ஏன் ஏசி வெப்பநிலையை எப்போதும் 24-25 டிகிரி செல்சியஸில் வைக்க வேண்டும்?

ஈரப்பதம் மற்றும் வெப்பமான காலநிலையைச் சமாளிக்க, நம்மில் பலர் ஏர் கண்டிஷனருக்கு முன்னால் உட்கார விரும்புகிறோம். இதேபோல், குளிர்காலத்தில், ப்ளோயர் விட சிறந்தது எதுவுமில்லை.

ஆனால் அத்தகைய தீவிர வெப்பநிலை வெளிப்பாடு ஒருவரின் ஆரோக்கியத்தை எந்த வகையிலும் பாதிக்கிறதா?

தீவிர வெப்பநிலை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் உடன் பேசிய மருத்துவர் ரஜத் அகர்வால், “ஏசி வெப்பநிலையை 24-25 டிகிரி செல்சியஸில் பராமரிப்பது நல்லது, ஏனெனில் இது ஆரோக்கியமான உடல் செயல்பாடுகளுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது.

மிகக் குறைந்த வெப்பநிலையின் தீங்கான விளைவுகளைப் பற்றிப் பேசுகையில், “நமது உடல் வெப்பநிலையுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த வெப்பநிலையில் செட் செய்யப்படும் ஏசி தெர்மோஸ்டாட்கள் அறைகளுக்குள் குறைந்த ஈரப்பதம் காரணமாக தோல் சேதத்தை அதிகரிக்கும்,” என்றார்.

இதன் விளைவாக, “தோல் திசுக்கள் அதிகப்படியான உடல் எண்ணெயை உற்பத்தி செய்கின்றன, இது குறைந்த வியர்வை உற்பத்தியை ஈடுசெய்யும், இது இறுதியில், தோல் நிறமாற்றாம், முகப்பரு, முன்கூட்டிய சுருக்கங்கள் மற்றும் தோல் எரிச்சலை ஏற்படுத்தும்.”

மிக அதிக வெப்பநிலை “அதிகப்படியான வியர்வை உற்பத்திக்கு வழிவகுக்கலாம், எனவே ஈரப்பதத்தை மீட்டெடுக்க சருமத் துளைகள் மூடிவிடும், இதனால் தோல் செயல்பாட்டில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.”

மற்ற தீங்கு விளைவிக்கும் தாக்கங்களில் “நம் உடலின் வெப்ப ஒழுங்குமுறைக்கு இடையூறு” மற்றும் “குளிர், வறண்ட காற்றில் வைரஸ் கிருமிகள் பரவுதல்” ஆகியவை அடங்கும். அதிக வெப்பநிலை ஆஸ்துமா அல்லது ஒற்றைத் தலைவலி தூண்டும், அவர் மேலும் கூறினார்.

நீண்ட கால பாதிப்புகள் பற்றி தெரிவித்த அவர், இது முன்கூட்டிய முதுமை, அதிகப்படியான முடி உதிர்தல், தோல் கோளாறுகள் மற்றும் ஒவ்வாமைக்கு வழிவகுக்கும். வறண்ட தொண்டை, நாசியழற்சி மற்றும் நாசி அடைப்பு” ஆகியவை நீண்ட கால பாதிப்புகளில் சில  என்று மருத்துவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.