சென்னை: கடந்த ஆட்சியாளர்களின் தவறுகளால் போதைக் கும்பல்கள் வளர்ந்தன எனவும் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவே ஆணிவேர் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார். இந்தக் கும்பல்களை ஒழிக்க முதன்முறையாக கலெக்டர் – SP.க்களின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. போதைக்கு எதிரான மக்கள் இயக்கத்தை உருவாக்கி, சமூகத் தீமையை வேரறுப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.