காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் : தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்று சாதனை

லண்டன்,

இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தொடர்ந்து தற்போது லண்டனில் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. .

இதில் வாள்வீச்சு இறுதிபோட்டியில் சீனியர் பெண்கள் சேபர் பிரிவில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை ,எதிர்கொண்டார்.

இதில் ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை 15-10 என்ற புள்ளி கணக்கில் அவரை வீழ்த்தி தமிழக வீராங்கனை பவானிதேவி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.