தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டதனால் ,குறுந்தூர ஓட்ட வீரர் ஹிமாஷா இசானுக்கு 4 வருட கால முழுமையான போட்டி தடை விதிப்பதற்கு இலங்கை ஊக்க மருந்து தடுப்பு பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 03 ஆம் திகதி இது தொடர்பில் இலங்கை ஊக்க மருந்து தடுப்பு முகவர் நிலையத்தினால் நடத்தப்பட்ட ஒழுக்க குழு பரிசோதனை சிபாரிசு அடிப்படையில் இவர் தவரிழத்துள்ளமை உறுதிசெய்யப்பட்டதனால் இந்த தடை விதிக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
யுபூன் அபேகோனுக்கு முன்னர் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தெற்காசியாவில் சாதனையை பதிவு செய்திருந்த இசான் சார்க் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்களை பெற்று கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.