கோர்ட்டுக்கு செல்லும் கருணாநிதி பேனா; கடலுக்குள் இறங்க அண்ணாமலை ப்ளான்!

உலகின் நீளமான 2வது கடற்கரையாக சென்னை மெரினா விளங்கி வருகிறது. இங்கு தான் மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்கள் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன.

மெரினா கடற்கரைக்கு காற்று வாங்கவும், சுற்றிப்பார்க்கவும் நாள்தோறும் வருகை தரும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த 4 தலைவர்களின் நினைவிடங்களுக்கும் தவறாமல் சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் மறைந்த கருணாநிதி பயன்படுத்திய பேனாவை நினைவூட்டுவதற்காக பேனா வடிவிலான நினைவு சின்னத்தை கருணாநிதி நினைவிடம் அருகில் வங்க கடலுக்குள் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

“உதயநிதி அப்புறம் இன்பநிதி” பொருத்தமான பெயர் – இபிஎஸ் விமர்சனம்!

இந்த பேனா சின்னமானது 42 மீட்டர் அதாவது 137 அடி உயரத்தில் கடலுக்குள் புல்வெளிகள் நடுவில் அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கருணாநிதி நினைவிடத்தின் உள்ளே இருந்து கடலின் மேல் 360 மீட்டர் தூரம் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் உயர்தர பாலம் அமைக்கப்பட உள்ளதாகவும் தக்வல் வெளியாகி உள்ளது.

தமிழக பொதுப்பணித் துறை சார்பில் ரூ.81 கோடியில் அமைக்கப்பட உள்ள இந்த நினைவுச் சின்னத்துக்கு சென்னை மாவட்ட கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதேப் போன்று, மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையமும் இந்த பேனா நினைவு சின்னத்துக்கு அனுமதி தந்துள்ளது. இது, தொடர்பான தகவல்கள் வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் கருணாநிதி பேனா நினைவு சின்னத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தற்போது தமிழகம் முழுவதும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக

வங்கக்கடலில் 134 அடி உயர பேனா நினைவு சின்னம் அமைப்பது என்பது வங்கால தலைமுறைக்கு வழிகாட்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேப்போல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘கருணாநிதி நினைவு பேனா சின்னத்தை எதிர்ப்பவர்கள் டி.என்.ஏவை பரிசோதிக்க வேண்டும்’ என சற்று காட்டமாகவே விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் கருணாநிதி நினைவு பேனா சின்னம் அமைக்கும் திட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி, தேமுதிக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக கருணாநிதி நினைவு பேனா சின்னத்தை அமைக்க விடக்கூடாது என்பதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிரமாக இறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒருவேளை எதிர்ப்பை மீறி கருணாநிதி நினைவு பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு இறங்குமேயேனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடுத்து நிறுத்துவது என அண்ணாமலை திட்டமிட்டு காய்நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது கடும் விமர்சனம், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் என்று, எதிர்க்கட்சி ரேஞ்சுக்கு நாள்தோறும் வலம் வரும் அதே வேளையில் சட்ட ரீதியாகவும் தமிழக அரசுக்கு குடைச்சல் கொடுக்க அண்ணாமலை முடிவு செய்து இருப்பதாக கூறப்படும் தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.