கேரளா முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு புரட்சிகர திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவை கேரளா மட்டும் இல்லாமல் உலகுக்கே ஒரு பாடமாகவும் இருந்து வருகின்றன.
இந்நிலையில் கேரளாவின் அருமை பெருமைக்கெல்லாம் பங்கம் வரும் வகையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அரங்கேற்றி வந்த பழமைவாத நடவடிக்கைகள் அனைத்தையும் மூட்டை கட்டி அனுப்பி இருக்கிறது கேரளா அரசு.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவின் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்றாக விளங்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் நாள்தோறும் வந்து வழிபடுவது வழக்கமாக இருந்து வந்தது.
முதல்வர் ஸ்டாலின் டென்ஷன்; திருமாவளவனுக்கு நெருக்கடி!
இந்த சபரிமலை ஐயப்பன் கோயிலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு, தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கேரள அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இருந்தபோதிலும் சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரங்களில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு எடுக்கும் முக்கிய முடிவுகளில் கேரளா அரசு தலையிடாமலேயே இருந்து வந்தது.
இந்நிலையில் தான் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லக்கூடாது என்று, கடந்த 1972ம் ஆண்டு முதன்முதலில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு உத்தரவிட்டது.
5 ஜி அறிமுகம் ஆகிறது; இனி..ஸ்பீடு அள்ளுமே!
இந்த உத்தரவை எதிர்த்தும், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியும் மாகாதேவன் என்பவர் கேரள ஐகோர்ட்டில் கடந்த 1991ம் ஆண்டு வழக்கு தொடுத்தார்.
இதில் தேவசம் போர்டுக்கு எதிராகவே கேரளா அரசு தனது தரப்பு வாதங்களை கடுமையாக எடுத்து வைத்து கேரளாவில் ஆண், பெண் வேறுபாடுகளை அகற்றவும் கோரிக்கை விடுத்து இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘இந்து மதத்தின் நம்பிக்கையின்படியும், கேரள கோயில்களில் கடைப்பிடிக்கப்படுகின்ற ஆகம விதியின்படியும், சபரிமலை தேவஸ்தான விதியின்படியும் பெண்களை அனுமதிப்பது தவறானது’ என கூறி, அதே ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி தள்ளுபடி செய்தது.
மக்களவையில் ‘ஷாக்’ மசோதா; முளையிலேயே கிள்ளிய திமுக!
இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பளித்ததோடு
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது அரசியல் சாசனப் பிரிவு 14க்கு எதிரானது என கூறி அதிரடி காட்டியது.
இவ்வாறாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்ல முடியாமல் இருந்த நிலையை மாற்றிய கேரளா அரசு தற்போது சபரிமலை பிரசாதம் தயாரிக்கும் பணியில் எந்த சாதியினரும் ஈடுபடலாம் என்ற நிலையை உருவாக்கி உள்ளது.
சபரிமலையை பொறுத்தவரை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளையொட்டி ஐயப்பன் கோவிலுக்கு உண்ணியப்பம், வெல்ல நைவேத்தியம், சர்க்கரை பாயசம், அவல் பிரசாதம் ஆகியவற்றை மலையாள பிராமணர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று முன்பே தேவசம் போர்டு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது.
பேரறிவாளன் வீட்டு விசேஷம்; வரும் 31ம் தேதி கெட்டி மேளம்!
இந்த அறிவிப்பு கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படுமென அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தேவசம் போர்டு அமைப்பு கொடுத்து இருந்த விளம்பரம் சமத்துவக் கொள்கைக்கு எதிரானது என்ற குற்றம்சாட்டும் எழுந்தது.
மேலும், இதுதொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் அம்பேத்கர் கலாச்சார பேரவை தலைவர் சிவன் புகார் அளித்து இருந்தார். இந்த சூழலில் தான் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிராமணர்கள் மட்டுமே நைவேத்தியம், பிரசாதம் தயாரிக்க வேண்டும் என்கிற நிபந்தனையை விலக்கி தேவசம் போர்டு திடீரென விளம்பரம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டிலேயே விளம்பரங்களில் சாதி சார்ந்த பாகுபாடு காட்டக் கூடாது என, மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்பு அளித்து இருந்தாலும், கேரளாவில் பின்பற்றப்படாத நிலையே நீடித்து வந்தது.
விஜயகாந்த் மகன் திருமணம்; விழாவில் பங்கேற்கும் மோடி?
இதனால் நெருக்கடி ஏற்பட்டு இருப்பதை உணர்ந்த கேரளா முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் தேவசம் போர்டு நிர்வாகிகளை அழைத்து, ‘சபரிமலை கோயில் விவகாரங்களில் சாதி வேறுபாட்டை களைய வேண்டும்’ என கறாராக உத்தரவிட்டு இருந்தார்.
இதன் எதிரொலியாகவே, சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிராமணர்கள் மட்டுமே நைவேத்தியம், பிரசாதம் தயாரிக்க வேண்டும் என்கின்ற நிபந்தனையை விலக்கி தேவசம் போர்டு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் நீண்டகால பழமைவாத நடைமுறையை துடைத்து எறிந்து சாதி பாகுபாட்டுக்கு சவுக்கடி கொடுத்து சமாதி கட்டியிருக்கிறது கேரளா அரசு என பல்வேறு தரப்பினரும் பாராட்டுகின்றனர்.