சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகைகளை சரிபார்க்க ஒத்துழைப்பு கொடுப்பதாக பொது தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறையால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவிடம் பெறப்பட்ட 19 ஆயிரம் மனுக்களில் 14 ஆயிரம் மனுக்கள் கோவில் நிர்வாகத்தின் மீது புகார் தெரிவித்தாக கூறப்படுகிறது.
இது குறித்து 28 முக்கிய புகார்களை பதிவு செய்த அதிகாரிகள் விளக்கம் கோரி 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பொது தீட்சிதர்கள் சார்பில் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், தங்களது நேர்மையையும், வெளிப்படைதன்மையையும் நிலைநாட்ட நகைகளை சரிபார்க்க ஒத்துழைப்பு தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.