சீனாவை தாக்கும் புதிய வைரஸ் தொற்று: லாங்யா நோய்த்தொற்றின் அறிகுறிகள்

லாங்யா வைரஸ் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் ஆகும். சீனாவில் மேலும் 35 பேருக்கு ஜூனோடிக் லாங்யா வைரஸ் (LayV) இருப்பது உறுதி செய்யப்பட்டது. தைவான் நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (TCDC) தகவலின்படி, சீன நிலப்பரப்பில் உள்ள ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் இந்த தொற்றுநோய் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வைரஸைக் கண்டறியவும் அதன் பரவலைக் கண்காணிக்கவும் நியூக்ளிக் அமில சோதனை நடைமுறைகளைப் பயன்படுத்தலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தைபே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது உலகம் குரங்கு அம்மை நோய் பாதிப்பு குறித்து கவலையில் இருக்கும் நிலையில், சீனாவின் ஷாண்டோங் மற்றும் ஹெனான் ஆகிய இரு மாகாணங்களிலும் லாங்க்யா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இந்த வைரஸின் மரபணு வரிசைமுறை மற்றும் நோய்த்தொற்று வைரஸ் மீதான கண்காணிப்பை வலுப்படுத்த உள்நாட்டு ஆய்வகங்களுக்கான தரப்படுத்தப்பட்ட செயல்முறையை விரைவில் நிறுவவிருப்பதாக CDC துணை இயக்குனர்-ஜெனரல் சுவாங் ஜென்-ஹ்சியாங் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை; பீதியை கிளப்பும் Monkeypox 

ஆகஸ்ட் 8 அன்று, சீனாவில் புதிய வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தைபே CDC முன்னெச்சரிக்கை அறிவிக்கை வெளியிட்டது, வைரஸ் பரவல் தொடர்பான செய்திகளை உன்னிப்பாகக் கண்காணிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தைபே டைம்ஸிடம் பேசிய தைவான் சிடிசியின் துணை இயக்குனர் சுவாங் ஜென்-ஹ்சியாங்,  இந்தவைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது என்று இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறினார்.

வீட்டு விலங்குகளுக்கு செய்யப்பட்ட முழுமையான செரோலாஜிக்கல் ஆய்வுக்குப் பிறகு, அவற்றில் கிட்டத்தட்ட 2% ஆடுகள் மற்றும் 5% நாய்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சீனாவின் ஷாண்டோங் மற்றும் ஹெனான் ஆகியவற்றில் நோய்த்தொற்றுகள் பதிவாகியதை அடுத்து, மரபணு வரிசைமுறை மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்த உள்நாட்டு ஆய்வகங்களுக்கான தரப்படுத்தப்பட்ட செயல்முறை விரைவில் வெளியிடப்படவுள்ளது.

மேலும் படிக்க | குரங்கு அம்மையின் புதிய அறிகுறிகள்; அலட்சியப்படுத்த வேண்டாம்
 
இந்த வைரஸ் பாதிப்பினால், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழக்கும். இந்த வைரஸ் பெரும்பாலும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்று தைபே டைம்ஸஸ் தெரிவித்துள்ளது. 

LayV வைரஸ் பாதிப்பால் இதுவரை யாரும் இறந்ததாக தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு வைரஸ்கள், அதிலும் சீனாவில் உருவாகும் வைரஸ்களும் அவற்றின் பாதிப்புகளும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

LayV வைரஸ் அறிகுறிகள்

காய்ச்சல், சோர்வு, இருமல், பசியின்மை, உடல் அசௌகரியம், குமட்டல், தலைவலி மற்றும் வாந்தி ஆகியவை LayV வைரஸ் பாதித்தவர்களுக்கு ஏற்படலாம். இதுவரை இந்த நோய்த்தொற்று பாதித்தவர்களில் 26 நபர்களுக்கு ஏற்பட்ட இந்த அறிகுறிகள் தான் ஏற்பட்டுள்ளன.

மேலும், LayV வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் குறைந்துள்ளது. மேலும், கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை என பாதிப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.