சுதந்திரத்திற்கு முன் உருவாகிய மாபெரும் வர்த்தக 7 சாம்ராஜியங்கள்..!

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி இந்த சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளதை அடுத்து பல வீடுகளில் தேசியக்கொடி பறந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே நாட்டில் நிறுவப்பட்ட 7 பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

விமான விபத்து நடந்த இடத்தில் மருத்துவமனை…. பலியானவர்களின் குடும்பத்தினர் தந்த நிதி!

7 நிறுவனங்கள்

7 நிறுவனங்கள்

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே பல நிறுவனங்கள் நாட்டில் மிகப்பெரிய லாபத்துடன் இயங்கி வந்தன. அவ்வாறு உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் பெயரையும் புகழையும் பெற்று நாட்டிற்கும் பெருமை சேர்த்தது. அன்றிலிருந்து இன்று வரை நாட்டிற்கு பெருமை சேர்த்த 7 பெரிய இந்திய பன்னாட்டு நிறுவனங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

1. டாடா குழுமம்

1. டாடா குழுமம்

டாடா குழுமம் இந்தியாவின் மிகப் பழமையான வணிக நிறுவனங்களில் ஒன்றாகும்/ இன்று 100க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் வணிகம் உள்ளது. இது 1868ஆம் ஆண்டு ஜம்செட்ஜி நுசர்வாஞ்சி டாடாவால் நிறுவப்பட்ட இந்த குழுவில் எஃகு, ஆட்டோமொபைல், ஆலோசனை சேவை, ஹோட்டல்கள், தகவல் தொடர்பு, இரசாயனங்கள், பானங்கள் மற்றும் பல வணிகங்கள் உள்ளன.

2. சிப்லா லிமிடெட்
 

2. சிப்லா லிமிடெட்

டாக்டர். கே. ஏ. ஹமீத் 1937ஆம் ஆண்டில் சிப்லா லிமிடெட் நிறுவனத்தை நிறுவினார். இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காமல் ஒரு உயிர் கூட போகக்கூடாது என்ற நோக்கத்துடன் பம்பாயில் நிறுவப்பட்ட இந்நிறுவனம், தற்போது முன்னணி இந்திய மருந்து தயாரிப்பாளராக உள்ளது. இது இன்று உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது.

3. பிரிட்டானியா

3. பிரிட்டானியா

பிரிட்டிஷ் ஆட்சியின் போது பிரிட்டானியா நிறுவனம் கடந்த 1892ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம், எஃப்எம்சிஜி நிறுவனங்களில் ஒரு முக்கிய நிறுவனமாக மாறி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த நிறுவனம் உலகளாவிய பிராண்டாக இன்று மாறியுள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் ரஸ்க், பிஸ்கட், ரொட்டி, கேக்குகள், பால் பொருட்கள், பானங்கள் மற்றும் தயிர் மற்றும் சீஸ் ஆகியவை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை ஆகும்.

4) மஹிந்திரா குழு

4) மஹிந்திரா குழு

மும்பையை தலைமையிடமாக கொண்ட மஹிந்திரா குழுமம் ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் கடந்த 1945ஆம் ஆண்டு குலாம் முஹம்மது, ஜகதீஷ் சந்திர மஹிந்திரா, கைலாஷ் சந்திர மஹிந்திரா ஆகிய மூன்று நிறுவனர்களால் தொடங்கப்பட்டது. தற்போது, ​​ஆனந்த் மஹிந்திரா அவர்கள் மஹிந்திரா குழுமத்தின் தலைவராக உள்ளார். இந்நிறுவனத்தின் வணிகங்கள் பல்வேறு பிரிவுகளில் உலகம் முழுவதும் 100 நாடுகளில் பரவியுள்ளது.

5) பிர்லா குழு

5) பிர்லா குழு

கன்ஷியாம் தாஸ் பிர்லாவின் தாத்தா சேத் ஷிவ் நாராயண் பிர்லா கடந்த 1857ஆம் ஆண்டில் ராஜஸ்தானின் ஷேகாவதி பகுதியில் உள்ள பிலானி என்ற சிறிய நகரத்தில் பிர்லா குழுமத்தை தொடங்கினார். இந்நிறுவனம் தற்போது பிராண்டட் ஆடைகள், சிமெண்ட், ஜவுளி, உரங்கள், இரசாயனங்கள், இரும்பு, கடற்பாசிகள், நிதிச் சேவைகள், பிபிஓ மற்றும் பல துறைகளில் ஈடுபட்டு வரும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். உலகம் முழுவதும் 36 நாடுகளில் 1.5 லட்சம் ஊழியர்களுடன் செயல்படுகிறது.

6) டாபர்

6) டாபர்

டாபர் 1884ஆம் ஆண்டு கொல்கத்தாவில் மருத்துவப் பாதுகாப்பு பொருட்களை தயாரிப்பதற்காக டாக்டர். எஸ்.கே பர்மன் அவர்களால் நிறுவப்பட்டது. இன்று 120 நாடுகளில் இயங்கி வரும் டாபர் நிறுவனம், தோல் பராமரிப்பு, முடி பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் சுகாதார பானங்கள் உட்பட தனது வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளது. இது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும்.

7) கோட்ரெஜ் குழு

7) கோட்ரெஜ் குழு

1897ஆம் ஆண்டு அர்தேஷிர் கோத்ரேஜ் மற்றும் பி.பி கோத்ரெஜ் ஆகியோரால் கோத்ரெஜ் நிறுவனம் நிறுவப்பட்டது. கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸை உள்ளடக்கிய கோத்ரெஜ் குழுமம், இப்போது ரியல் எஸ்டேட், பொறியியல், உபகரணங்கள், தளபாடங்கள், பாதுகாப்பு மற்றும் விவசாயப் பொருட்கள் உள்ளிட்ட தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

August 15 Independence Day: These 7 Indian companies, formed before Independence!

August 15 Independence Day: These 7 Indian companies, formed before Independence!| சுதந்திரத்திற்கு முன் உருவாகிய மாபெரும் வர்த்தக சாம்ராஜியங்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.