உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா-வின் சிஇஓ எலான் மஸ்க் டிவிட்டரை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்த நிலையில் பல பிரச்சனைகள் காரணமாக இந்த ஒப்பந்தம் முடக்கப்பட்டது.
இந்நிலையில் டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் மீது வழக்கு தொடுத்துள்ள வேளையில் எலான் மஸ்க் என்ன செய்வது எனத் தெரியாமல் மாட்டிக்கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தான் மீண்டும் மிகப்பெரிய தொகைக்கு டெஸ்லா பங்குகளை விற்பனை செய்துள்ளார்.
மும்பையில் மிகவும் காஸ்ட்லியான வீடுகளின் சொந்தக்காரர்கள் இவர்கள் தான்..!
![டிவிட்டர்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/08/1660113837_957_twitter-1566-1583219954-1652872960.jpg)
டிவிட்டர்
டிவிட்டரை கைப்பற்றும் 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம் முடக்கப்பட்ட இதற்காக வழக்கு நடந்து வரும் வேளையில் திடீரென டெஸ்லா பங்குகளை விற்பனை செய்வதைத் தவிர்த்திருக்க வேண்டும், ஆனால் முடியவில்லை என எலான் மஸ்க் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
![டெஸ்லா பங்குகள்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/08/tesla-1655709476.jpg)
டெஸ்லா பங்குகள்
உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருக்கும் எலான் மஸ்க், டிவிட்டரை கைப்பற்றுவதற்காக ஏப்ரல் மாதம் சுமார் 8.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்த நிலையில் இனி டெஸ்லா பங்குகளை விற்பனை செய்ய எவ்விதமான திட்டமும் இல்லை என எலான் மஸ்க்-ஏ உறுதி செய்தார்.
![எலான் மஸ்க்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/08/elonmusk-1647350853-1649998046-1652462800-1656403184.jpg)
எலான் மஸ்க்
இந்த நிலையில் சட்ட ஆலோசகர்கள், எலான் மஸ்க்-யிடம் டிவிட்டர்-க்கு எதிரான வழக்கில் தோல்வி அடையும் பட்சத்தில் டிவிட்டரை கைப்பற்ற வேண்டிய நிலை வரும் இல்லையெனில் அதிகப்படியான தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும். இவ்விரண்டுக்கும் அதிகப்படியான டெஸ்லா பங்குகளை விற்க வேண்டியது கட்டாயமாகும் எனத் தெரிவித்துள்ளனர்.
![ஏப்ரல் 25 ஒப்பந்தம் ரத்து](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/08/elonmusk-buy-twitter2-1650941772-1660113388.jpg)
ஏப்ரல் 25 ஒப்பந்தம் ரத்து
எலான் மஸ்க் – டிவிட்டர் மத்தியில் செய்யப்பட்ட ஏப்ரல் 25 ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்ட நிலையில் டிவிட்டர் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை அக்டோபர் 17ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த வழக்கு டிவிட்டருக்குச் சாதமாக இருப்பது மட்டும் அல்லாமல் எலான் மஸ்க்-கிற்குப் புலி வால் பிடித்த கதை என விமர்சனம் செய்து வருகின்றனர்.
![6.88 பில்லியன் டாலர்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/08/elon-musk-twitter-21-1657283980.jpg)
6.88 பில்லியன் டாலர்
இந்த நிலையில் தான் எலான் மஸ்க் ஆகஸ்ட் 5 மற்றும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் சுமார் 6.88 பில்லியன் டாலர் மதிப்புள்ள 7.92 மில்லியன் பங்குகளை விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் தற்போது எலான் மஸ்க்-யிடம் 155.04 மில்லியன் டெஸ்லா பங்குகள் மட்டுமே உள்ளது.
![டெஸ்லா பங்குகள்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/08/82821725-cms-1621589214-1651066481-1654248829-1660113523.jpg)
டெஸ்லா பங்குகள்
இந்தப் புதிய விற்பனை மூலம் கடந்த ஒரு வருடத்தில் எலான் மஸ்க் சுமார் 32 பில்லியன் டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்துள்ளார். எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றுவது சரியா..? உங்க பதிலை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க…
Elon Musk sells nearly $7 billion Tesla shares in 2 days ; Twitter legal feud turn out big problem
Elon Musk sells nearly $7 billion Tesla shares in 2 days ; Twitter legal feud turn out big problem டிவிட்டர் கொடுத்த நெருக்கடி.. மீண்டும் டெஸ்லா பங்குகளை விற்ற எலான் மஸ்க்..!