தமிழ் ராக்கர்ஸ் : கலை உலகின் வலியை சொல்லும் தொடர்: அறிவழகன்
ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர் தமிழ் ராக்கர்ஸ். அருண் விஜய், அழகம் பெருமாள், எம் எஸ் பாஸ்கர், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், வினோதினி வைத்தியநாதன் மற்றும் தருண் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடர் வருகிற 19ம் தேதி முதல் முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் இயக்குனர் அறிவழகன் கூறியதாவது: பைரசி, ஹால் காபி, டோரன்ட் டவுன்லோட் போன்ற வார்த்தைகள் என்ன தான் கேள்வி பட்டதாக இருந்தாலும், அதனால் கலை உலகில் ஏற்படும் வலிகள் மற்றும் வேதனைகள் உலகிற்கு தெரியாது. தமிழ் ராக்கர்ஸ் ஒரு சுவாரஸ்மான திரில்லர் மூலம் அருண் விஜய் தனது ருத்ரா எனும் கதா பாத்திரம் மூலம் மக்களை பைரசி உலகத்தின் சவால்களுக்கு இந்த தொடர் அழைத்துச் செல்லும்.
இதுகுறித்து அருண் விஜய் கூறியதாவது: சமுதாயத்திற்கு தேவைப்படும் தொடராக இதனை பார்க்கிறேன். திருட்டு என்பது காலம் காலமாக கலை உலகில் தொடர்ந்து கொண்டிருக்கின்றதும். இந்த தொடர் திரை உலகில் பைரசி எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை வெளிக்காட்டும். மற்றும் எனது கதாபாத்திரமான ருத்ரா என்பவன் எப்படி இதனை முடிவிற்கு கொண்டு வருகின்றான் என்பதே கதை என்றார்.