திருச்சியில் மின் கம்பங்கள் சாய்வது தொடர்கதை; உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Trichy people wants official to care damaged electric poles: திருச்சி புதுக்கோட்டை சாலையில் ஆடி மாத காற்றுக்கு 6 மின்கம்பங்கள் சாய்ந்ததில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மின் கம்பங்கள் சாய்வது தொடர் கதையாகி உள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்த விபரம் வருமாறு :

திருச்சி மாநகர பகுதிகளில் சாலையில் நடுவே சிமெண்ட் கட்டைகளை கட்டி அதன் நடுவே பூ செடிகளை வளர்த்து வைத்து அழகு படுத்துவதை மாநகராட்சி செய்து வந்தது. அதன் நடுவில் மின்கம்பங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.

இதையும் படியுங்கள்: விரைவில் மதுரவாயல்-துறைமுகம் சாலை; போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுமா?

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த மின் கம்பங்களுக்கு இடையே இணையதள வசதி, (தொலைக்காட்சி) பார்ப்பதற்கு தேவையான கேபிள் ஒயர்களை கட்டி வைத்திருந்தனர். கடந்த இரண்டு மாதமாக முதலில் கனமழை பெய்த பொழுது திருச்சி மாநகராட்சியின் அருகாமையில் மின்கம்பங்கள் இரவில் சாய்ந்தன. அதேபோல் மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிராகவும் இருந்த மின்கம்பங்கள் சாய்ந்தது. இப்படி மாநகராட்சி பகுதிகளில் கம்பங்கள் விழுவது தொடர் கதையாகி, வேதனையளிக்கின்றது.

அந்த வகையில், இன்று திருச்சி புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு பால்பண்ணை அருகே ஆறு மின்கம்பங்கள் முறிந்தே விழுந்து விட்டன. இந்த மின்கம்பங்களுக்கு இடையேயும் இணையதள, தொலைக்காட்சி கேபிளுக்கு ஒயர்கள் கட்டப்பட்டிருந்தது.

தற்போது ஆடி மாதக் காற்று பலமாக வீசி வருவதால் இந்த மின் கம்பங்களுக்கு இடையே உள்ள ஒயர்களின் பாரம் அதிகமாக இருப்பதால் காற்று வேகமாக அடித்தவுடன் 6 மின்கம்பங்கள் சாய்ந்து முறிந்து விழவே செய்து விட்டது. இதனால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுவரை நடந்த மூன்று நிகழ்வுகளில் எந்த விதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. மாநகராட்சி உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் நிகழ்ந்த சாலை முழுவதும் பிரதான சாலைகள் எப்பொழுதும் வாகன நெரிசல் அதிகமாக உள்ள பகுதி. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் இனி இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

க. சண்முகவடிவேல் 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.