நாடாளுமன்ற தேர்தல் பாஜக கூட்டணி; நயினார் நாகேந்திரன் சொன்ன சீக்ரெட்!

தமிழக பாஜக துணைத் தலைவரும், பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அதன் ஒருபகுதியாக கீழக்கரை அருகே அலவாக்கரைவாடி கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்று அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

“தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பல்வேறு விஷயங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகின்றார். ஜிஎஸ்டி கவுன்சிலில் கலந்துக்கொண்டு அங்கு ஒரு தகவலை தெரிவித்துவிட்டு இங்கு வந்து ஒரு தகவல்களை தெரிவித்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார் என்று கடுமையாக சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசு ஊழியர்கள் விவகாரத்தில் அமைச்சர் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஒன்றை ஆண்டுகள் ஆகிய நிலையில் மது, கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் விற்பனை தமிழகத்தில் அதிகரித்துள்ளது என்று விமர்சித்தார்.

போதைப் பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதால் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து மாநிலத்தில் கிரிமினல் குற்றவாளிகள் அதிகரித்துள்ளதை அன்றாட நிகழ்வுகளில் பார்க்க முடிவதாக கூறிய அவர், இதனை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், தமிழக ஆளுநர் நடிகர் ரஜினிகாந்த் இடையிலான சந்திப்பு தொடர்பாக அதிக கிசுகிசுப்புகள் வரும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் நிச்சயம் கூட்டணி அமைக்கும். அதிக இடங்களில் வெற்றி பெறும்” இவ்வாறு கூறினார்.

10 ஆண்டுக்கு மேலாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவிப்பு! தண்ணீர் தொட்டிஇருந்தும் பயனில்லை!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்துள்ளது. இதனால் அக்கட்சி தலைவர்கள் இரண்டாக பிரிந்து நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு அதிமுகவை பாஜக பலவீனப்படுத்த முயற்சிப்பதாக அதிமுக தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ள நயினார் நாகேந்திரனின் பேச்சு அரசு வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.