திருச்செங்கோடு அருகே பள்ளி மாணவ மாணவிகளை பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர் தரக்குறைவாக பேசியதாக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இங்கிருந்து செல்லும் பள்ளி மாணவர்களுக்கு வழக்கமாக ஒரு சிறப்பு பேருந்து இயக்கப்படும். அவ்வாறு இயக்கப்படும் சிறப்பு பேருந்து குறித்த நேரத்திற்கு வராததால் பள்ளிக்கு செல்ல காலதாமதம் ஆனதால் வழக்கமாக அந்த வழியில் வழக்கமாக இயங்கி வரும் அரசு பேருந்தில் மாணவ மாணவிகள் ஏற முயன்றனர்.
அப்போது பேருந்தில் ஏற்றாமல் நடத்துநர் தரக் குறைவாக திட்டியதால் மாணவர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்செங்கோடு குமாரபாளையம் ரோட்டில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் விரைந்து வந்து மாணவர்களை சமாதானப் படுத்தியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM